இயக்குனர் அட்லீ மீது ஹைதிராபாத் காவல் நிலையத்தில் புகார்! மீண்டும் கதை திருட்டு சர்ச்சை!

0
145

பிகில் படத்தின் கதை தன்னுடையது என சினிமா உதவி இயக்குனர் செல்வா என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு தொடர்பாக அட்லீ கூறுகையில், இந்த கதை என்னுடையது. எனது எண்ண ஓட்டத்தில் இந்த கதை உருவானது’ என  குறிப்பிட்டு வருகிறார்.

இந்நிலையில் பிகில் கதை தொடர்பாக ஹைதிராபாத்தில் உள்ள ஒரு காவல் நிலையத்தில் தெலுங்கு சினிமா இயக்குனர் நந்தி சின்னி குமார் என்பவர் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், ‘ மராட்டிய மாநிலத்தை சேர்ந்த கால்பந்தாட்ட வீரரான அகிலேஷ் பால் என்பவரது வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்க அவரிடம் 5.5 லட்சம் பணம் கொடுத்து இருந்தேன்.

ஆனால், அதற்கடுத்து வேறு எதுவும் கூறவில்லை. பின்னர், அண்மையில் வெளியான பிகில் படத்தை பார்த்தேன். அதில் அட்லீ அகிலேஷ் பால் கதையும் இதுவும் ஒன்றுபோல இருக்கிறது. என்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தேன். இது குறித்து விஜய் மற்றும் அட்லீ என இருவரையுமே தொடர்புகொள்ள முடியவில்லை. ஆதலால் இது குறித்து காவல்துறை நடவடிக்கை எடுக்கவேண்டும் என குறிப்பிட்டு உள்ளார்.