அதர்வாவின் தள்ளிபோகாதே பட டீஸர் ரிலீஸ்…ரசிகர்களிடையே செம்ம ரெஸ்பான்ஸ்

0
69

ஆர். கண்ணன் இயக்கத்தில் அதர்வா, அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ள படம் தள்ளிப் போகாதே. காதல் கதை கொண்ட தள்ளிப் போகாதே படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த பிப்ரவரி மாதம் வெளியானது. இந்நிலையில் டீஸரை இசையமைப்பாளர் அனிருத் வெளியிடுவார் என்று அறிவித்தார்கள்.

அறிவித்தபடி டீஸரை அனிருத் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். டீஸரில் அதர்வா, அனுபமா பரமேஸ்வரன் இடையேயான காதல் காட்சிகள் ரசிக்கும்படி உள்ளது. டீஸரை பார்த்தவர்கள் கூறியிருப்பதாவது,அருமையாக இருக்கிறது. அனுபமா பரமேஸ்வரன் அழகாக இருக்கிறார். படத்தை தியேட்டரில் பார்க்க காத்துக் கொண்டிருக்கிறோம் என்று தெரிவித்துள்ளனர்.

படத்தை இயக்கியுள்ளதுடன் தயாரிக்கவும் செய்துள்ளார் கண்ணன். மனதில் உள்ள பாரத்தை எல்லாம் இறக்கி வைத்துவிட்டு ஜாலியாக படம் பார்க்க ஆசைப்படுவோருக்கு இந்த தள்ளிப் போகாதே நிச்சயம் மகிழ்ச்சி அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.ஒரு ஹிட் கொடுத்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் அதர்வாவுக்கு தள்ளிப் போகாதே கை கொடுக்கும் என்று நம்பப்படுகிறது.