பிறந்தநாளில் சர்ப்ரைஸ் கொடுத்த துல்கர் சல்மான்..!வெளியான “Kurup” ஸ்னீக் பீக்

0
39

மலையாள நடிகராக இருப்பினும் தந்தையை போலவே இவரும் தமிழ் படங்கள் நடிப்பதில் பெரிய அளவில் ஆர்வம் காட்டிவருகின்றார். மலையாள திரையுலகிற்கு இணையாக இவருக்கு தமிழிலும் பெரிய அளவில் ரசிகர்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது. தற்போது பிருந்தா மாஸ்டர் இயக்குநராக களமிறங்கியுள்ள ‘ஹே சினாமிக்கா’ என்ற படத்தில் நடித்துவருகிறார்.

தற்போது துல்கர் சல்மான் நடிப்பு மற்றும் தயாரிப்பில் உருவாகி வரும் புதிய திரைப்படம் தான் ‘குருப்’. கேரளாவை சேர்ந்த பிரபல குற்றவாளி ஒருவர் பற்றிய புனைவுக்கதையே இந்த படம் என்ற தகவலும் வளம்வரும் வருகின்றது. இந்த படத்தில் துல்கருடன் இணைந்து Sobhita Dhulipala நடிக்கின்றார். இந்த படத்தை பிரபல மலையாள இயக்குநர் ஸ்ரீநாத் ராஜேந்திரன் இயக்குகிறார்.

இந்நிலையில் ஈகை பெருநாளை முன்னிட்டு இந்த படத்தில் இருந்து போஸ்டர் ஒன்று அண்மையில் வெளியான நிலையில் இன்று துல்கர் சல்மானின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் குருப் படத்தின் sneak peek ஒன்றை வெளியிட்டுள்ளார்.