உணவு கலப்படத்தை தோலுரித்து காட்டும் சித்தார்த்தின் ‘அருவம்’! சாட்டையடி வசனங்களுடன் வெளியான ட்ரெய்லர் இதோ!

0
74

நல்ல கதையம்சங்கள் உடைய திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் நடிகர் சித்தார்த். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான சிவப்பு மஞ்சள் பச்சை திரைப்படம் நல்ல வெற்றியை பதிவு செய்ததோடு, சாலை விதிகளை மதிப்பது குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்தி பாராட்டை பெற்றது.

தற்போது சித்தார்த் அடுத்ததாக அருவம் எனும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் அக்டோபர் 11ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்தில் கேத்தரின் தெராசா ஹீரோயினாக நடித்துள்ளார். இந்த படத்தினை சாய் சேகர் இயக்கியுள்ளார்.S.S.தமன் இசையமைத்துள்ளார். ட்ரெண்டியன்ட் ஆர்ட்ஸ் பட நிறுவனம் தயாரித்துள்ளது.

இப்பட ட்ரெய்லர் தற்போது ரிலீஸ் ஆகியுள்ளது. இதில் உணவு கலப்படம் பற்றி படம் தீவிரமாக பேசுயுள்ளது என தெளிவாக தெரிகிறது. ‘ஆண்டவன் படைச்ச உயிருக்கு அரசாங்கம் விலை நிர்ணயம் செய்கிறது.’ ‘சாப்பாட்டு பொருள்களை கலப்படம் பண்ணாதீங்கனு சொன்னா அது தப்பா’  ‘ கேன்சர் என்பது வியாதி இல்லை அது வியாபாரம்’ என ஒவ்வொரு வசனமும் ஆழமான கருத்து நிறைந்ததாக இருக்கிறது. இந்த ட்ரைலர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here