ஒரே படத்தில் 2 ஹீரோக்கள் இணைவது நல்லது..!மாபியா படம் குறித்து அருண்விஜய்…

0
175

கார்த்திக் நரேன் இயக்கி உள்ள ‘மாபியா’ படத்தில் அருண் விஜய், பிரசன்னா இணைந்து நடித்துள்ளனர். கதாநாயகியாக பிரியா பவானி சங்கர் வருகிறார். சுபாஷ்கரன் தயாரித்துள்ளார்.இந்நிலையில்,நடிகர் அருண்விஜய் அளித்த பேட்டியில்,தெரிவித்திருப்பதாவது “தடம் படத்துக்கு பிறகு மாபியா படத்தில் நல்ல கதாபாத்திரம் அமைந்துள்ளது. இதில் போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரியாக வருகிறேன். நிறைய புதிய விஷயங்களை முயற்சி செய்துள்ளேன். எனது தோற்றமும் ஸ்டைலாக இருக்கும். பிரசன்னாவுக்கும், எனக்கும் நடக்கும் மோதலில் விறுவிறுப்பை பார்க்கலாம்.

கார்த்திக் நரேன் படத்தை தெளிவாக எடுத்துள்ளார். கதையோடு காதலும் இருக்கும். படங்களில் ஒன்றுக்கும் மேற்பட்ட கதாநாயகர்கள் இணைந்து நடிப்பது ஆரோக்கியமான விஷயம். இதனால் படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு கிடைக்கும் என்று தெரிவித்தார்.

அதன் பின்னர்,நடிகர் பிரசன்னா தெரிவிக்கையில்,நடிகர் பிரசன்னா பேசும்போது, “படங்களில், ஒன்றுக்கு மேற்பட்ட கதாநாயகர்கள் இணைந்து நடிப்பது நல்ல விஷயம். தொடர்ந்து சில படங்களில் வில்லனாக நடிப்பது எனது இமேஜை பாதிக்காது. மீண்டும் கதாநாயகனாக நடிப்பதற்கு உதவவே செய்யும். எனவே வில்லன் வேடங்களை நேர்மறையாகவே பார்க்கிறேன். மாபியா படத்தில் அலட்டிக்கொள்ளாத வித்தியாசமான வில்லனாக நடித்து இருக்கிறேன் என்று தெரிவித்தார்.