தளபதி விஜய்யின் ‘ஒரு குட்டி கதை’ பாடலில் வெளியான குட்டி ரகசியம் இதோ..!அதிகாரப்பூர்வ அறிவிப்பு

0
63

தளபதி விஜய்யின் ’மாஸ்டர்’ படத்தின் ‘ஒரு குட்டி கதை’ என்ற பாடல் இன்று காதலர் தினத்தை முன்னிட்டு வெளியாக உள்ளது. விஜய் பாடியுள்ள இந்த பாடல் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், நடிகரும், இயக்குனரும், பாடகரும், பாடலாசிரியருமான அருண் ராஜா காமராஜா தான் இப்பாடலை எழுதியுள்ளார் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அருண் ராஜா சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான கபாலி படத்தின் நெருப்புடா நெருங்குடா பாப்போம் பாடல் மூலம் பிரபலமானார். சிவகார்த்திகேயன் தயாரிப்பில் கனா படத்தின் மூலம் அவர் இயக்குனர் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.