உடை எடையை குறைப்பது எப்படி— புத்தகம் எழுதிய அனுஷ்கா

0
212

தமிழ்,தெலுங்கில் முன்னனி கதாநாயகியாக வளம் வருபவர் நடிகை அனுஷ்கா.தென்னிந்திய நடிகைகளில் அதிகமான ரசிகர்களை வைதிருப்பவரும் இவரே.சமீபத்தில் இவர் உடல் எடை கூடி படங்களில் நடிக்க சிரமப்பட்டார். பல்வேறு பயிற்சிகள், சிகிச்சைக்கு பின் அவர் தன்னுடைய உடல் எடையை குறைத்து இருக்கிறார். சமீபத்தில் அவர் உடல் எடையை குறைத்திருந்த புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலானது.

இந்நிலையில், தன்னுடைய நியூட்ரிஷியனுடன் இணைந்து ‘தி மேஜிக் வெயிட்லாஸ் பில்’ என்ற தலைப்பில் புத்தகமாக வெளியிட இருக்கிறார்.இது குறித்து அனுஷ்கா கூறியதாவது “நமக்கு இருக்கும் எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வுகளும் இருக்கின்றன. நமக்கான தீர்வை நாம்தான் தேர்வு செய்ய வேண்டும். அது தொடர்பான தகவல்களை இந்த புத்தகம் உங்களுக்கு வழங்கும்” என குறிப்பிட்டுள்ளார். இந்தப் புத்தகத்துக்கு ஷில்பா ஷெட்டி முன்னுரை எழுதியுள்ளார்.