கோலிக்கு போட்டியாக கிரிக்கெட்டில் களம் காணும் அனுஷ்கா சர்மா…!வைரல் புகைப்படம்…

0
51

இந்தியப் பெண்கள் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான ஜுலன் கோஸ்வாமி வாழ்க்கை வரலாற்றில் அவரது கதாபாத்திரத்தை ஏற்று நடித்து வருகிறார் நடிகை அனுஷ்கா சர்மா. கணவர் விராட் கோலிக்குப் போட்டியாக இந்திய அணியின் ஜெர்சியில் அனுஷ்கா கலக்கி வருவதாக அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

சிறந்த ஆல்ரவுண்டராக அறியப்படுபவர் ஜுலன் கோஸ்வாமி. மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்தவரான கோஸ்வாமி கடந்த 2002-ம் ஆண்டு முதல் இந்தியப் பெண்கள் கிரிக்கெட் அணியில் விளையாடி வருகிறார். சர்வதேச அளவில் பெண்கள் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அதிக விக்கெட் வீழ்த்திய வீராங்கனை என்ற சாதனையையும் கோஸ்வாமி படைத்துள்ளார்.

கடந்த 2018-ம் ஆண்டு கோஸ்வாமியைப் பெருமைப் படுத்தும் விதமாக இந்திய அரசு அவருக்கு ஒரு போஸ்டேஜ் ஸ்டாம்ப் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. இவரது பயோபிக் திரைப்படத்தில் அனுஷ்கா சர்மா நடிக்கும் காட்சிகள் தற்போது கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.