துக்ளக் தர்பார் படத்தில் இணைந்த மற்றொரு கதாநாயகி…

0
189

‘சிந்துபாத்’ படத்துக்குப் பிறகு, விஜய் சேதுபதி நடிக்கும் படம் ‘துக்ளக் தர்பார்’. இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் டெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்க, 96 படத்தை வெளியிட்ட 7 ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் மற்றும் வயாகாம் 18 ஆகிய இரண்டு தயாரிப்பு நிறுவனங்களும் இணைந்து தயாரிக்கின்றன.

கோவிந்த் வசந்தா இசையமைக்கும் இப்படத்தில், அதிதிராவ் கதாநாயகியாக நடிக்கிறார்.’நானும் ரெளடிதான்’ படத்துக்குப் பிறகு, பார்த்திபன் விஜய் சேதுபதியுடன் இணைந்து நடிக்கும் படம் இது. இந்நிலையில், படத்தின் இன்னொரு கதாநாயகியாக மஞ்சிமா மோகன் ஒப்பந்தமாகியிருக்கிறார்.