புத்தகத்தில் தெரிவித்திருக்கிறேன் – சொல்கிறார் ஆண்ட்ரியா!

0
109

திருமணமானவருடன் வைத்திருந்த தவறான உறவு குறித்து நான் எழுதிய புத்தகத்தில் தெரிவித்திருக்கிறேன் என நடிகை ஆண்ட்ரியா தெரிவித்துள்ளார்.

நடிகை ஆண்ட்ரியா தான் நடித்த வட சென்னை படத்திற்கு பிறகு எந்த படத்திலும் ஒப்பந்தம் ஆகாமல் இருந்தார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கடுமையான மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்த தான், தொடர் ஆயுர்வேத சிகிச்சை பிறகு புது மனுஷியாக உணர்கிறேன் என்று கூறி இன்ஸ்டாகிராமில் ஒரு போட்டோவை பதிவிட்டிருந்தார்.

இந்த மன அழுத்தத்திற்கு அவர் கூறியது திருமணமான நபருடன் தான் தவறான உறவு வைத்திருந்ததாகவும், அந்த நபர் தன்னை உடல் அளவிலும் மனதளவிலும் மிகவும் கொடுமை படுத்தியதாகவும் கூறினார். அதன் காரணமாகவே பெரும் மன அழுத்தத்திற்கு ஆளாகி ஆயுர்வேத சிகிச்சை பெற்றதாகவும் தெரிவித்தார்.

அந்த நபர் யார் என்பதை ஆண்ட்ரியா தனது கவிதை புத்தகமான ப்ரோக்கன் விங் புத்தகத்தில் தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்தும் தான் ஏமாற்றப்பட்டது குறித்தும் தைரியமாக எழுதியிருக்கிறேன் என தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here