விஜய் சேதுபதியுடன் முதல் முறையாக ஜோடி சேரும் முன்னணி நடிகை!!! விவரம் உள்ளே…

0
652

தற்போது மிகவும் பிஸியான நடிகர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தான். எப்போதும் இவர் தன் கைவசம் 10 படங்களை வைத்து கொள்வர். இவரின் சிந்துபாத் திரைப்படம் அடுத்த வாரம் திரைக்கு வரவுள்ளது. அதுமட்டுமின்றி மாமனிதன், லாபம், எடக்கு,சங்கத்தமிழன், க/பெ. ரணசிங்கம் என பல படங்களில் நடித்து வருகிறார் இவர். இந்நிலையில் தற்போது தனது 33 வது படத்தினை பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிட்டுள்ளார்.

இந்த படத்தினை வேங்கட கிருஷ்ணா ரோஹன்ட் இயக்குகிறார். சந்திரா ஆர்ட்ஸ் நிறுவனம் இந்த படத்தினை தயாரிக்கிறது. இந்த படத்தில் நடிப்பதற்காக அமலாபால் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இது விஜய் சேதுபதி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.