சஞ்சீவ் – மானஷா திருமணம் எப்போது? மானஷாவே சொன்ன தகவல்!!

0
263

விஜய் டிவியில் கடந்த சில வருடங்களாக மிகப்பிரபலமாக மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று ஒளிபரப்பப்படும் சீரியல் தொடர் ராஜா ராணி. இந்த தொடரில் மானஷா என்ற நடிகையும் சஞ்சீவ் என்று நடிகரும் நடித்து வருகின்றனர். மானஷாவை பற்றி நாம் பெரிதாக அறிமுகம் கொடுக்க தேவையில்லை. சென்பா என்ற கேரக்டர் மூலம் தமிழக மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றவர். இந்நிலையில் இருவரும் கடந்த ஒரு வருடமாக காதலித்து வருகின்றனர்.

இந்நிலையில் சமீபத்தில் நடைபெற்ற விருது வழங்கும் விழா ஒன்றில் சஞ்சீவ் மற்றும் ஆல்யாவிற்கு சின்னத்திரையில் பிரபலமான ஜோடிகள் என்ற விருது வழங்கப்பட்டது. இந்த விழாவின் போது விருது குறித்து கேள்விக்கு பதிலளித்த ஆலியா, இப்போதைக்கு கல்யாணம் செய்யும் முடிவில் இல்லை. நடிப்பில் நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டு முன்னேற வேண்டும். அதன் பிறகு திருமணம் நடக்கும் என்று கூறியுள்ளார்.