5 வருடத்திற்கு முன்னர் தன்னுடன் அஜித் பேசிய வீடியோவை வெளியிட்ட பெண் பைக் ரேசர் அலிஷா அப்துல்லா!

0
134

அல்டிமேட் ஸ்டார் ‘அஜித் குமார்’நடிகர் அஜித் அவர்களுக்கு ரசிகர்கள் பட்டாளத்திற்கு அளவே இல்லை என்று கூட கூறலாம். 
முதல் பெண் பைக் ரேஸரும், நடிகையுமான அலிஷா அப்துல்லா ஐந்து வருடங்களுக்கு முன்னால் அஜித் தன்னிடம் கூறிய வார்த்தைகளை வீடியோ பதிவு செய்து தற்போது சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து அலிஷா அப்துல்லா கூறியது, அஜித்திற்கு பைக்ரேஸ் என்றால் ரொம்ப பிடிக்கும். ஐந்து வருடங்களுக்கு முன்னால் தல அஜித் அவர்கள் என்னுடைய சூப்பர் பைக்கை வாங்கி ஓட்டி பார்த்தார் என்று கூறினார். அப்படி ஓட்டும் போது அவர் என்னிடம் ஆல் த பெஸ்ட், டூ வெல் ,பி சேப் என்று பைக்கில் உட்கார்ந்தபடி என்னிடம் கூறினார். இந்த விஷயம் என்னை நெகிழ வைத்தது. மேலும், நான் இந்த அளவிற்கு பைக் ரேஸீர்க்கு வந்ததற்கு காரணம் அஜித் சார் தான். அவர் தான் என்னுடைய இன்ஸ்பிரேஷன் என்றும் கூறினார்.மேலும், என்னுடைய குருநாதர் என்றும் அவர் பதிவிட்டுள்ளார்.