தனுஷுடன் இணைந்து நடிக்கும் அக்சய்குமாரின் புதிய படம்…!சம்பளம் மட்டுமே இத்தனை கோடிகளா…!

0
152

பாலிவுட்டை பொருத்தவரை அக்சய்குமாருக்கு பெரும்பாலான படங்கள் தொடர்ச்சியாக கோடிக்கணக்கில் வசூலை குவித்து வருகின்றன. அவரது படங்களின் டிஜிட்டல் மற்றும் டிவி உரிமங்களை பெறவும் நிறுவனங்களுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது.

இதனால் அவரது சம்பளமும் கிடுகிடுவென உயர்ந்துவருகிறது. அந்த வகையில், இயக்குநர் ஆனந்த் எல் ராய் அடுத்து இயக்கவுள்ள இந்தி படத்தில், அக்சய்குமாருக்கு 120 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.தனுஷுடன் இணைந்து தான் நடிக்கவுள்ள புதிய படத்திற்காக நடிகர் அக்சய்குமார் 120 கோடி ரூபாய் சம்பளம் பெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்ட 2019ஆம் ஆண்டிற்கான உலகின் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்கள் பட்டியலில் 4ஆம் இடம் பிடித்த அக்சய்குமார், பாலிவுட்டிலேயே அதிக சம்பளம் பெறும் நடிகராக உருவெடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் தனுஷ் நடிக்கும் இந்த படத்தில் அக்சய் குமார்,சாரா அலி கான் உள்ளிட்டோர் நடிக்கவுள்ளனர்.