என்னோட ஒன்றாக வேலை செஞ்சவுங்க கொரோனாவால் மரணம் – அக்‌ஷரா ஹாசன் உருக்கம்

0
57

2015-ம் ஆண்டு அமிதாப் பச்சன், தனுஷ் உள்ளிட்டோர் நடிப்பில் பால்கி இயக்கத்தில் வெளியான ஷமிதாப் படத்தின் மூலம் கமல்ஹாசனின் மகள் அக்‌ஷரா ஹாசன் திரைத்துறையில் நடிகையாக அறிமுகமானார்.தமிழில் விவேகம் படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்த நடிகை அக்‌ஷராஹாசன், தற்போது மூடர் கூடம் இயக்குநர் நவீன் இயக்கத்தில் அக்னி சிறகுகள் படத்தில் நடித்து வருகிறார்.

 சமூகவலைதளத்தில் ஆக்டிவ்வாக இருக்கும் அக்‌ஷரா ஹாசன், இந்த கொரோனா காலத்தில் நாம் நிறைய அழகான உயிர்களை இழந்துவிட்டோம் என்றும் தன்னுடன் ஷமிதாப் படத்தில் மேக்கப் ஆர்டிஸ்டாக பணியாற்றிய சச்சின் தாதா கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மரணமடைந்திருப்பதாகவும் உருக்கமாக தகவல் பகிர்ந்துள்ளார். மேலும் சச்சின் தாதா, நேர்மறையான எண்ணம் கொண்டவர் என்றும் மிகச்சிறந்த நண்பர் என்றும் குறிப்பிட்டுள்ளார்