“என் அடுத்த படத்துக்கு நீ தான் மியூசிக் டிரைக்டர்” வாக்கு கொடுத்த தல அஜித்!!!!

0
388

தல அஜித் தற்போது நேர்கொண்ட பார்வை திரைப்படத்திற்காக தீவிரமாக நடித்து வருகிறார். இந்த படத்தில் வக்கீல் வேடத்தில் நடிப்பதால் முதலில் தாடியுடனும் தற்போது தாடி இல்லாமலும் நடித்து வருகிறார். ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த திரைப்படத்தை வினோத் இயக்குகிறார். ஶ்ரீதேவியின் கணவர் போனி கபூர் இந்த படத்தினை தயாரிக்கிறார். இந்நிலையில் தற்போது அஜித் தனது ரசிகர்களுடன் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுத்த புகைப்படங்கள் சமீபத்தில் வெளியாகின. இதனைத் தொடர்ந்து இளம் இசையமைப்பாளரான ஜிப்ரானை சந்தித்துள்ளார் அஜித்.

தீரன் அதிகாரம் ஒன்று, விஸ்வரூபம்-2, உத்தம வில்லன், பாபநாசம் என பல படங்களுக்கு இசையமைத்துள்ளார் ஜிப்ரான். கமலஹாசனின் தற்போதைய படங்கள் அனைத்திற்கும் இவரே இசையமைத்து வருகிறார். இவரை சந்தித்து பேசிய அஜித் இறுதியில் “நம்ம சேர்ந்து ஒர்க் பண்ணுவோம் ” என அவரிடம் கூறியுள்ளார். இதனை ஜிப்ரான் தனது ட்விட்டரில் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.