வலிமை படத்தில் சில மாற்றங்களை செய்ய சொல்லி வினோத்திடம் கூறினாரா அஜித்..?

0
39

தல அஜித்திற்கு தமிழ் சினிமாவில் அதிக அளவில் வெறித்தனமான ரசிகர்கள் இருக்கிறார்கள். அஜித்தின் முந்தைய படமான விஸ்வாசம் படத்தில் அப்பா மகள் சென்டிமென்ட் இருந்ததால் மிகப் பெரிய அளவில் அது ரசிகர்களை ஈர்த்தது. இந்த படத்தினை அஜித்தின் வெறித்தனமான ரசிகர்கள் மட்டுமின்றி குடும்ப ரசிகர்களும் அதிக அளவில் தியேட்டர்களுக்கு வந்து ரசித்தார்கள்.

அது போல தன்னுடைய அடுத்த படமான வலிமை படத்தில் குடும்ப ரசிகர்களை குறிப்பாக பெண்களை கவரும் வகையில் ஏதாவது இருக்க வேண்டும் என அஜித் நினைக்கிறாராம். அதற்காக படத்தில் சில மாற்றங்களை செய்யும் படி அஜித் இயக்குனர் வினோத் இடம் கூறி இருக்கிறார் என்றும் உறுதிப்படாத தகவல் வெளியாகி உள்ளது.

இந்த படத்தில் போலீஸ் அதிகாரியாக அஜித் நடிக்கும் நிலையில், பெண்களை கவரும் வகையில் சில விஷயங்களை சேர்க்க வினோத் தற்போது பணியாற்றி வருகிறாராம். பல மாதங்களுக்குப் பிறகு ஷூட்டிங் தற்போது மீண்டும் தொடங்கியிருக்கும் நிலையில். அடுத்த வருடம் கோடை விடுமுறைக்கு படம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.