12 ஆண்டுகளுக்கு பின் திரையில் இணையும் அஜித்-வடிவேலு கூட்டணி…!

0
100

எச்.வினோத் இயக்கத்தில் நேர்கொண்டபார்வை திரைப்படத்தை அடுத்து அஜித் நடிப்பில் உருவாகவுள்ள அஜித்தின் 60 திரைப்படத்தில் வைகைப்புயல் வடிவேலு நடிக்க வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்பு எழில் இயக்கத்தில் ராஜா திரைப்படத்தில் இணைந்து நடித்த அஜித் வடிவேல் இடையே அப்பொழுது கருத்துவேறுபாடு ஏற்பட்டதாக செய்திகள் பரவின என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் பின்னர் இணைந்து நடிப்பதை அஜீத் வடிவேலு என இருவரும் தவிர்த்து வந்த நிலையில், தற்பொழுது 12 ஆண்டுகளுக்கு பிறகு இந்த கூட்டணி மீண்டும் இணைந்து நடிக்க இருப்பது சாத்தியமாகி உள்ளதாக என தகவல் வெளியாகியுள்ளன.

இந்த செய்தி உண்மையானால் அஜித் -வடிவேல் ரசிகர்களுக்கு சிறப்பு விருந்தாக அமையும் என்பதில் எந்தவொரு சந்தேகமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.