தல அஜித் பிறந்தநாளில்,தனுஷ் ரசிகர்களுக்கு காத்திருக்கும் செம்ம ட்ரீட்…!

0
145

பொங்கலுக்கு வெளியான பட்டாஸ் படத்தை அடுத்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல்கள் வெளிவரத் தொடங்கியுள்ளன.

பேட்ட படத்தை அடுத்து தனுஷின் 40-வது படத்தை இயக்கி வருகிறார் கார்த்தி சுப்புராஜ். இந்தப் படத்துக்கு இன்னும் பெயரிடவில்லை. ஆகவே டி40 என்றே குறிப்பிட்டு செய்திகள் வெளியாகி வருகின்றன. இந்தப் படத்தில் தனுஷ் உடன் மலையாள நடிகை ஐஸ்வர்யா லக்‌ஷ்மி, கலையரசன், ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். ஒய் நாட் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவாகும் இந்தப் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.

லண்டன் மற்றும் மதுரையில் படப்பிடிப்பு நடைபெற்று முடிந்திருக்கும் நிலையில், கடைசி 3 நாட்களுக்கான ஷூட்டிங்கை 6-ம் தேதி நடத்த திட்டமிட்டிருப்பதாகவும் படக்குழு அறிவித்துள்ளது. அதோடு டி40 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வரும் 9-ம் தேதி வெளியிடப்படும் என்றும் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனால் தனுஷ் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

இந்நிலையில் இந்தப் படத்தை மே முதல் நாளில் திரைக்கு கொண்டுவர படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் மூலம் அஜித்தின் பிறந்தநாளில் தனது ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுக்க திட்டமிட்டிருக்கிறாரா தனுஷ் என்பதை காத்திருந்து பார்க்கலாம்.