”கோப்ரா” படத்தில் நடந்த மிகப்பெரிய மாற்றம்..!இயக்குநர் வெளியிட்ட அதிரடி அப்டேட்

0
131

சியான் விக்ரம் தற்போது கைவசம் பல படங்கள் வைத்திருக்கிறார். அதில் முக்கியமான ஒன்று அஜய் ஞானமுத்து இயக்கி வரும் கோப்ரா படம். விக்ரம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பின் உச்சத்தில் இருக்கும் இந்த படத்தில் விக்ரம் கிட்டத்தட்ட 20 விதமான கெட்டப்பில் தோன்றியுள்ளார் என கூறப்பட்டு வருகிறது. பர்ஸ்ட் லுக் போஸ்டரில் அதிக அளவு கெட்டப்கள் காட்டப்பட்டு இருந்தது உங்களுக்கு நினைவிருக்கும். இந்த படத்தை இயக்கி வரும் அஜய் ஞானமுத்து இதற்கு முன்பு எடுத்த டிமான்டி காலனி, இமைக்கா நொடிகள் போன்ற படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது என்பதால் கோப்ரா படத்தின் கதை எப்படி இருக்கும் என்கிற மக்கள் மத்தியில் அதிகரித்து உள்ளது.

இந்நிலையில் இன்று கோப்ரா பட இயக்குனர் அஜய் ஞானமுத்துவின் பிறந்தநாள் என்பதால் அவருக்கு சினிமாதுறை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் கோப்ரா படத்தின் தயாரிப்பாளர் செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் லலித்குமார் பதிவிட்டு இருக்கும் ட்வீட்டில் அஜய் ஞானமுத்து பிறந்தநாளுக்காக பெரிய கொண்டாட்டத்திற்கு திட்டமிட்டு இருந்ததாகவும், ஆனால் அதை தற்போது தள்ளி வைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்றும் தெரிவித்திருக்கிறார். அவர் கூறியிருப்பதாவது..”பிறந்தநாள் வாழ்த்துக்கள் அஜய் ஞானமுத்து. சிறப்பான பிறந்த நாள் கொண்டாட்டத்திற்காக நாங்கள் இங்கு திட்டமிட்டு இருந்தோம். ஆனால் நீங்கள் தற்போது மதுரையில் இருப்பதால் இந்த கொண்டாட்டத்தினை நீங்கள் எங்களுடன் இணையும் நாளில் நடத்தலாம் என தள்ளி வைத்து இருக்கிறோம் என தெரிவித்து உள்ளார்.

தற்போது கோப்ரா படத்தின் ஷூட்டிங் கொரோனா காரணமாக நிறுத்தப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. ரஷ்யாவில் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த நேரத்தில் உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்த காரணத்தினால் ஷுட்டிங்கை ரத்து செய்து விட்டு இந்தியா திரும்பியது படக்குழு.தற்போது படப்பிடிப்பு நடத்த தமிழ்நாடு அரசு அனுமதி அளித்து இருக்கும் சூழ்நிலையில் பல்வேறு கட்டுப்பாடுகளை சேர்த்து விதித்திருக்கிறது. குறைந்த அளவு பணியாளர்கள் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும் கூறப்பட்டிருக்கிறது. அதனால் பல பெரிய பட்ஜெட் படங்கள் இன்னும் துவங்காமல் இருக்கின்றன. கோப்ரா ஷுட்டிங் மீண்டும் எப்போது துவங்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் இந்த சூழ்நிலையில், அஜய் ஞானமுத்து அதை பற்றி பேசி இருக்கிறார்.

தயாரிப்பாளர் லலித்குமார் ட்விட்டுக்கு நன்றி கூறி இருக்கும் அவர், “மிக்க நன்றி சார். மிக விரைவில் வந்து உங்களுடன் இணைந்து கோப்ரா படத்தின் பணிகளை துவங்குகிறேன்” என குறிப்பிட்டிருக்கிறார்.