கருப்பழகி ஐரா சாதித்தாளா? நயந்தாரவின் ஐரா படத்தின் விமர்சனம்!

0
319

நடிப்பு – நயன்தாரா, கலையரசன், யோகிபாபு மற்றும் பலர்
தயாரிப்பு – கேஜேஆர் ஸ்டுடியோஸ்
இயக்கம் – கேஎம் சர்ஜுன்
இசை – கேஎஸ் சுந்தரமூர்த்தி
வெளியான தேதி – 28 மார்ச் 2019
நேரம் – 2.22 மணி நேரம்

கடந்த சில வருடங்களாக நயன்தாரா தனது தனித்துவமான படங்களில் நடித்து வருகிறார். அதன் அடுத்தகட்ட படம் இந்த ஐரா. வழக்கமான படங்களை விட இதில் என்ன வித்தியாசம் இருக்கிறது என்று பார்ப்போம் வாருங்கள்.

கதைக்களம்

நேரத்தை காரணம் காட்டி ஒரு புறந்தள்ளப்பட்ட புறக்கணிக்கப்பட்ட பெண்ணின் ஆசைக்காக தன் வாழ்க்கையை தியாகம் செய்யும் செய்ய துணியும் ஒரு பெண்ணின் கதை இது. பழிவாங்க துடிக்கும் ஒரு பெண்ணின் கதை என காலம் காலமாக தமிழ் சினிமாவில் அரைக்கப்பட்ட மாவு என்றும் கூட சொல்லலாம். ஒரு கிராமத்தில் பவானி என்ற பெண்ணின் கருப்பு நிறத்தை காரணம் காட்டி குடும்பத்தினர்,ஊரார், நண்பர்கள் என சுற்றிலும் புறக்கணிக்கும் ஒரு பெண் பேயாக வந்து பலரை பழிவாங்குகிறார். அந்த இடத்திற்கு நயன்தாரா எவ்வாறு சென்றார் எப்படி அந்த பிரச்சனையை நயன்தாரா சரி செய்கிறார் என்பதுதான் கதை .

ஒரு பத்திரிக்கையில் வேலை பார்ப்பவர் நயன்தாரா அவருக்கு பெற்றோர் அமெரிக்க மாப்பிள்ளையை பார்க்கின்றனர். ஆனால் மாப்பிள்ளை பிடிக்காமல் தன் பாட்டி ஊரான பொள்ளாச்சிக்கு செல்கிறார். அங்கு அவரைச் சுற்றி பலர் மர்மமான விஷயங்கள் நடக்கிறது. இதனை வைத்து யூஸ் செய்து யூடியூபில் பேய் இருப்பது போன்ற ஒரு சில பொய்யான வீடியோக்களை பதிவு செய்து பிரபலமாகிறார். ஆனால் நிஜமாகவே அந்த இடத்தில் ஒரு பேய் இருக்கிறது. அது நயன்தாராவை துரத்த ஆரம்பிக்கிறது இதிலிருந்து நயன்தாரா எவ்வாறு தப்பிக்கிறார், அந்த பேயின் பிரச்சினைதான் என்ன? நயன்தாரா எவ்வாறு தீர்க்கிறார் இதுவே கதை சுருக்கம்.

படத்தின் ப்ளஸ்

தமிழ் சினிமாவில் கதாநாயகர்கள் தான் இரட்டை வேடத்தில் நடித்துள்ளனர். கிட்டத்தட்ட முதன்முறையாக நயன்தாரா வித்தியாசமான இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். யமுனா என்ற மார்டன் பத்திரிக்கையாளராகவும் பவானி என்ற கிராமத்து கருப்பழகியாகவும் இரண்டு வேடங்களில் ஒரே நேரத்தில் அற்புதமாக நடித்திருக்கிறார் நயன்தாரா. பவானி கேரக்டரில் கிராமத்து பெண்ணாகவே தன் உடல் மொழியை முற்றிலுமாக மாற்றி இயல்பாக நடித்திருக்கிறார். பவானியை உண்மையாக காதலிக்கும் கலையரசனின் நடிப்பு பிளஸ். இருட்டில் எடுக்கப்படும் ஒளிப்பதிவு அற்புதம், பேய் வரும் போது கொடுக்கப்படும் பின்னணி இசை பயமுறுத்தி நம்மை தியேட்டரில் உட்கார வைக்கிறது.

படத்தின் மைனஸ்

வழக்கமான பேய் படங்களில் உள்ள பல லாஜிக் இந்த படத்திலும் இடிக்கிறது. நல்ல பேயாக இருந்தால் கண்தெரியாத பாட்டியை ஏன் துன்புறுத்த வேண்டும், தன்னை நேரடியாக பாதிக்காத பலரை அந்தப் பேய் ஏன் துன்புறுத்த வேண்டும் என பல கேள்விகள் எழுகிறது. யோகி பாபுவின் காமெடிகள் பெரிதாக எடுபடவில்லை பள்ளிக்கால நயன்தாரா ஓரளவிற்கு ஓகே.

சினிமா மேடை ரேட்டிங் – 2.5/5