மாஸ்க் அணியாமல் காரில் சென்ற பிரபல நடிகை…வாக்குவாத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு

0
3

முகக் கவசம் இன்றி காரில் ப‌ய‌ண‌ம் செய்த‌ அருவி ப‌ட‌ ந‌டிகை அதிதி பால‌னுக்கு மருத்துவத் துறையினர் அபராதம் விதித்த‌னர்.‘அருவி’ படத்தில் நாயகியாக நடித்து கவனம் பெற்றவர் அதிதி பாலன். அதைத்தொடர்ந்து தற்போது மலையாளத்தில் லிஜூ கிருஷ்ணா இயக்கத்தில் நிவின் பாலிக்கு ஜோடியாக ‘படவெட்டு’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் கொடைக்கானல் ஏரிச்சாலையில் காரில் முகக்கவசம் அணியாமல் சென்ற அதிதி பாலனை அப்பகுதியில் சுகாதரத்துறையினர் மற்றும் மருத்துவத்துறையினர் தடுத்து நிறுத்தி அபராதம் விதிக்க முயன்றனர். அப்போது அதிகாரிகளுடனும் அங்கு செய்தி சேகரிப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஊடகவியலாளர்களிடமும் அதிதி பாலன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

தன்னை வழக்கறிஞர் என்று கூறிய அதிதி பாலன் செய்தியாளர்களிடம் அடையாள அட்டையைக் கேட்டும், காவல்நிலையத்துக்கு வரச் சொல்லியும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. முகக் கவசம் அணியாமல் வந்த அதிதி பாலனுக்கு மருத்துவத்துறையினர் அபராதம் விதித்து அனுப்பினர்.முன்னதாக கடந்த ஜூலை மாதத்தில் இ-பாஸ் பெறாமல் கொடைக்கானலுக்குச் சென்ற நடிகர் சூரி, விமல் ஆகியோர் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.