மலையாள நடிகர் சங்கத்திலிருந்து விலகிய பிரபல தமிழ் நடிகை..!காரணம் என்ன தெரியுமா..?

0
85

மலையாள நடிகர் சங்கமான AMMA-விலிருந்து நடிகை பார்வதி விலகியுள்ள சம்பவம் கேரள திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் சங்கத்திற்கு நிதி திரட்ட கடந்த 2008ம் ஆண்டு ’ட்வெண்டி 20’ என்ற திரைப்படம் தயாரிக்கப்பட்டது. இதில் மம்மூட்டி, மோகன்லால் உள்ளிட்ட பல முன்னணி நடிகர், நடிகைகள் இணைந்து நடித்திருந்தனர். நடிகை பாவனாவும் இந்த படத்தில் நடித்திருந்தார்.இதன் இரண்டாம் பாகம் குறித்த அறிவிப்பை மலையாள நடிகர் சங்க செயலாளர் இடவேல பாபு வெளியிட்டார். அப்போது முதல் பாகத்தில் நடித்த பாவனா இரண்டாம் பாகத்திலும் இடம் பெறுவாரா என கேள்வி கேட்கப்பட்டது.

Parvathi Menon Goes On A Date With Different Men And You Wouldn't Want To  Miss The Conclusion! | JFW Just for women

அவர் சங்கத்திலேயே உறுப்பினராக இல்லை என்றும் இறந்தவர் எப்படி திரும்ப வர முடியும் என்றும் இடவேல பாபு பதிலளித்தார். நடிகையை இறந்தவரோடு ஒப்பிட்டதால் ஆவேசமான பார்வதி, நடிகர் சங்கத்தில் இருந்து ராஜினாமா செய்துள்ளார்.