நயன்தாராவின் அடுத்த திரில்லர் படத்தின் ”டைட்டில்” என்ன தெரியுமா..?

0
3

கடந்த ஆண்டு மலையாளத்தில் நிவின் பாலிக்கு ஜோடியாக ‘லவ் ஆக்‌ஷன் டிராமா’ படத்தில் நடித்திருந்த நயன்தாரா, தற்போது அப்பு என்.பட்டாதிரி இயக்கத்தில் உருவாகும் ‘நிழல்’ படத்தில் குஞ்சாகா போபன் உடன் நடிக்கிறார்.

பல்வேறு படங்களுக்கு எடிட்டராக பணியாற்றி கேரள அரசின் சிறந்த எடிட்டருக்கான விருதைப் பெற்ற அப்பு என்.பட்டாதிரி இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். ஆண்டோ ஜோசப், அபிஜித் எம்.பிள்ளை, ஃபெலினி, படுஷா மற்றும் ஜினிஷ் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்துக்கு சூரஜ் இசையமைக்கிறார்.

‘நிழல்’ கதைக்கு நயன்தாரா பொருத்தமாக இருப்பார் என்று படத்தின் நாயகன் குஞ்சாகா போபன் இயக்குநரிடம் யோசனை தெரிவித்துள்ளார். இதையடுத்து நயன்தாராவிடம் இயக்குநர் கதையைச் சொல்ல, அவருக்குப் பிடித்துப் போகவே உடனே சம்மதம் தெரிவித்துள்ளார் நயன்தாரா.

അഞ്ചാം പാതിരാ'യ്ക്കു ശേഷം വീണ്ടും ത്രില്ലറുമായി കുഞ്ചാക്കോ ബോബന്‍;  'നിഴലി'ല്‍ നായിക നയന്‍താര | kunchacko boban and nayanthara to unite for  nizhal

இந்தப் படத்தின் படப்பிடிப்பு எர்ணாகுளத்தில் நடைபெற உள்ளது. கேரள அரசின் கொரோனா கால வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி குறைந்த நபர்களுடன் படப்பிடிப்பை நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது. மேலும் வாரத்துக்கு ஒருமுறை படக்குழுவினருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.

‘மூக்குத்தி அம்மன்’ படத்தின் ரிலீசுக்காக காத்திருக்கும் நயன்தாரா, விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’, விக்னேஷ் சிவன் தயாரிப்பில் ‘நெற்றிக்கண்’ உள்ளிட்ட படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார்.