நான் சைட் அடித்த ஒரே ஆள் அவர் தான்-நடிகை காயத்திரி ஓபன் டாக்..

0
766

நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், புரியாத புதிர், ரம்மி உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமான நடிகை காயத்ரி, இவர் நடிப்பில் சூப்பர் டீலக்ஸ் படம் வரும் வாரம் வெளியாகிறது.இந்த படத்தை பற்றி அவர் கூறும்போது.

“நான் இந்த படத்தில் நடிக்க தொடங்கும்போது பிற நடிகர்களை வைத்து எடுக்க வேண்டிய காட்சிகளை இயக்குனர் எடுத்து இருந்தார். அதில் நடித்த ஒரு நடிகர் என்னிடம் 25வது டேக்கில் தான் இயக்குனர் ஓகே செய்ததாக சொன்னார். எனக்கு பயமாகி விட்டது. எப்போதுமே என்னுடைய முதல் டேக் தான் சிறப்பானதாக இருக்கும். ஆனால் பயந்ததுபோல் அதிக டேக்குகள் வாங்கவில்லை.

விஜய் சேதுபதியின் ஷில்பா கதாபாத்திரம் எனக்கு மிகவும் பிடித்தது. விஜய் சேதுபதியை ஆண் தோற்றத்தில்கூட அந்த அளவுக்கு சைட் அடித்ததில்லை. ஷில்பாவை பயங்கரமாக சைட் அடித்தேன். டிரெய்லர் பார்த்தபோதுதான் அவரது உழைப்பு புரிந்தது”என்று கூறினார்