இனிமேல் நடிக்க போவதில்லை-ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த நடிகை…

0
164

தமிழில் காதல் அழிவதில்லை படத்தின் மூலம் அறிமுகமானவர் சார்மி.சிம்புவின் அறிமுக படமும் இதுவே.பின்னர் காதல் கிசு கிசு,லாடம்,அஹாஹா எத்தனை அழகு ஆகிய தமிழ் படங்களில் நடித்தார்.தமிழ் திரையுலகம் அந்த அளவிற்கு கை கொடுக்காவிட்டாலும் தெலுங்கு சினிமாவில் மிகவும் பிரபலமானவர் சார்மி.தெலுங்கில் இவர்க்கு என தனி ரசிகர் பட்டாளமே உண்டு.இந்நிலையில் சார்மி நான் இனிமேல் சினிமாவில் நடிக்க போவதில்லை என தெரிவித்துள்ளார்.

நடிப்பதை விட்டுவிட்டு இனி படங்களை தயாரிக்கப்போவதாக சார்மி தெரிவித்துள்ளார்.சார்மி தற்போது ராம் பொதினி,நித்தி அகர்வால் நடிக்கும் படம் ஒன்றை தயாரித்து வருகிறார்.அது போல் படங்களை தயாரிக்க விரும்புவதாகவும் இனி நடிக்க போவதில்லை என தெரிவித்துள்ளார் சார்மி.இதனால் சார்மி ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.