நடிகை அம்பிகாவின் மகன் இந்த படத்தின் நடிகரா.! யாருனு தெரியுமா.!

0
171


தென்னிந்திய சினிமா துறை உலகில் 80 மற்றும் 90களில் புகழ்பெற்ற ஹீரோயினியாக கலக்கி வந்தவர் தான் நடிகை அம்பிகா. இவர் ரஜினி, கமல் போன்ற பல முன்னணி ஸ்டார்களுடன் ஜோடியாக நடித்துள்ளார். தமிழக மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தவர். தற்போது தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் தொடர்களிலும், நிகழ்ச்சிகளிலும் பணியாற்றி வருகிறார்

நடிகை அம்பிகா 1980 கலிருந்து 1990 வரை அதாவது பத்து வருடங்களாக சினிமா துறையில் நம்பர்-1 நடிகையாக சிறந்து விளங்கினார். அதன்பின் திருமணம் செய்து கொண்டு குடும்ப வாழ்க்கையில் கவனம் செலுத்தி வந்தார். திருமணத்திற்குப் பிறகு படத்தில் முக்கிய கதாபாத்திரம், சீரியல், நிகழ்ச்சிகள் என மாறிவிட்டார்.அம்பிகா அவர்களுக்கு ராம் கேசவ், ரிஷிகேஷ் என்ற 2 மகன்கள் உள்ளனர்.

இதில் மூத்த மகன் ராம் கேசவ் அவர்கள் சினிமா திரையில் கதாநாயகனாக நடிக்கப் போகிறார் என்று அம்பிகா ஒரு பேட்டியில் கூறியிருந்தார். மேலும், அந்த படம் குறித்து அவர் தமிழ் அல்லது மலையாள படத்தில் என் மகன் கதாநாயகனாக விரைவில் நடிப்பார் என்று உறுதியாகக் கூறினார் சினிமா துறையில் அறிமுகப்படுத்த போவதாக கூறினார் மேலும், சினிமா துறையில் சிறப்பான முறையில் அவனை நடிகனாக அறிமுகப்படுத்துகிறேன் என்றும் கூறினார்.

இதனைத்தொடர்ந்து சினிமா துறையில் நடிகர், கதாசிரியர் என பல அவதாரங்கள் எடுத்த லிவிங்ஸ்டன் மகளும் அம்பிகாவின் மூத்த மகனும் இருவரும் சேர்ந்து படத்தில் நடிக்கப் போகிறார்கள் என தெரியவந்தது.ஆமாங்க ’கலாசல்’ என்ற படத்தில் இவர்கள் இருவரும் ஹீரோ, ஹீரோயினாக அறிமுகமாகி உள்ளார் என்ற தகவலை அதிகாரபூர்வமாக அறிவித்தனர்.