கட்சி தொடங்கியது உண்மை தான்…ஆனா அது மட்டும் தெரியாது ..?எஸ்.ஏ.சந்திரசேகர் தகவல்

0
48

நடிகர் விஜய் அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் கட்சி தொடங்க, பெயர் பதிவுக்காக தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.நடிகர் விஜய் அரசியலுக்கு வர வேண்டுமென்று சமீப நாட்களாக அவரது ரசிகர்கள் போஸ்டர் ஓட்டி வந்தனர். இதையடுத்து தனது ரசிகர்களை நேரில் சந்தித்து விஜய் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் விஜய்யின் அரசியல் பயணம் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்பட்டது.

இந்நிலையில் அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் கட்சியைப் பதிவு செய்து தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. கட்சித் தலைவராக பத்மநாபன், பொதுச்செயலாளராக எஸ்.ஏ. சந்திரசேகர் பெயர் வழங்கப்பட்டுள்ளது.நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கி உள்ளார் என்ற தகவல் தீயாய் பரவ ஆரம்பித்த நிலையில், விஜய்யின் அதிகாரப்பூர்வ மக்கள் தொடர்பாளர் ரியாஸ் அஹமது இந்த தகவலை மறுத்துள்ளார்.

இதனிடையே, இதனிடையே, விஜய்யின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் என்டிடிவிக்கு அளித்த பேட்டியில், அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் அரசியல் கட்சியை பதிவு செய்திருப்பதாகவும், இது விஜய்யின் கட்சி அல்ல என்றும் தெரிவித்தார்., மேலும் , விஜய் அரசியலுக்கு வருவாரா வரமாடாரா என்பது குறித்து தன்னால் கருத்து சொல்ல முடியாது எனவும் சந்திர சேகர் தெரிவித்துள்ளார்.