நகைச்சுவை நடிகர் சதீஷ் வீட்டில் பிறந்த குட்டி தேவதை…குவியும் வாழ்த்துகள்

0
41

விஜய், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட நடிகர்களுடன் நகைச்சுவை கூட்டணி அமைத்து நடித்து வரும் நடிகர் சதீஷ், முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார்.இந்நிலையில் தற்போது நடிகர் சதீஷ் – சிந்து தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இச்செய்தியை நடிகர் சதீஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

நடிகர் சதீஷுக்கு பெண் குழந்தை பிறந்திருப்பதை அறிந்த சிவகார்த்திகேயன், ராதிகா, இயக்குநர் ராஜேஷ் உள்ளிட்ட திரைபிரபலங்கள் பலரும் குட்டி தேவதைக்கு வாழ்த்துகள் தெரிவித்து வருகிறார்கள்.