நடிகர் ரஜினிக்கு என்னோட கையாள சமைச்சு போடணும்…தனது ஆசைகளை பகிர்ந்த நிவேதா தாமஸ்…

0
223

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளியான தர்பார் திரைப்படத்தில் ரஜினிக்கு மகளாக நடித்தவர் நிவேதா தாமஸ். இவர் தர்பார் திரைப்பட ஷூட்டிங்கின் போது நிகழ்ந்த பல சுவாரசிய சம்பவங்களை பேட்டி ஒன்றில் பகிர்ந்து கொண்டுள்ளார்.

தர்பார் பட ஷூட்டிங்கின் போது நானும், ரஜினி சாரும் நடித்த காட்சிகள் சுமார் 45 நாட்கள் படமாக்கப்பட்டன. ரஜினியின் மகளாக நடிக்க வேண்டும் என்றதுமே எனக்கு உதறல் எடுத்து விட்டது. ஆனால் முதல் நாள் ஷூட்டிங் ஸ்பாட்டில் அவரை பார்த்ததுமே எனக்கிருந்த பயம் நொடியில் காணாமல் போனது. அந்த நொடியே அவரை என் தந்தையாக பார்க்க துவங்கி விட்டேன்.

ரஜினி சார் மற்ற காட்சிகளை விட நகைச்சுவை காட்சிகளில் மிகவும் கலகலப்பாக நடித்து அனைவரயுமே உற்சாகப்படுத்திவிடுவார். பழகுவதற்கு மிகவும் எளிமையான, இனிமையான நபர். அவர் விதவிதமாக சாப்பிடுவதில் அவ்வளவு ஆர்வம் காட்டுவார். உணவு பதார்த்தங்களை அவர் ரசித்து ருசித்து சாப்பிடுவதை பார்க்கவே நன்றாக இருக்கும். அவர் விரும்பும் உணவு வகைகளை ஒரு நாளாவது அவருக்கு என் கையால் சமைத்து போட வேண்டும் என்பதே என் ஆசை என்றார் நிவேதா தாமஸ்.மோகன்லால், விஜய், கமல், ரஜினி என சூப்பர் ஸ்டார்களோட சேர்ந்து நடித்து விட்டேன். இதே போல நடிகர் அஜித்துடன் இணைந்து நடிக்க வேண்டும் என்பது என்னுடைய நீண்ட நாள் ஆசை. கூடிய சீக்கிரம் இந்த ஆசை நிறைவேறும் என நம்புவதாக கூறியுள்ளார் நிவேதா தாமஸ்.