ஒரு வழியாக முடிவுக்கு வந்த ஏ.ஆர்.முருகதாஸின் அடுத்த படம்…!ரிலீஸ் எப்பொழுது தெரியுமா?

0
75

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் தர்பார். ரஜினிகாந்த் நடித்திருந்த இந்தப் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றன.இந்தப் படத்துக்கு முன்னதாகவே இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் த்ரிஷா நடிக்கும் ராங்கி படத்துக்கு கதை எழுதியிருந்தார். எங்கேயும் எப்போதும் படத்தின் இயக்குநரும், ஏ.ஆர்.முருகதாஸிடம் உதவியாளராக பணியாற்றி இயக்குநரான சரவணன் இயக்குகிறார்.

லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு உஸ்பெகிஸ்தான் நாட்டில் நடைபெற்று வந்த நிலையில் அங்கு நிலவும் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் த்ரிஷா படப்பிடிப்பில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.விரைவில் படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் தொடங்க இருக்கின்றன. மேலும் இத்திரைப்படம் கோடை விடுமுறைக்கு திரைக்கு வர இருப்பதாகவும் கூறப்படுகிறது.

சத்யா இசையில் உருவாகியிருக்கும் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியானது. அதில் த்ரிஷாவின் அதிரடியான சண்டைக் காட்சிகள் இடம்பெற்றிருந்தன. மேலும் இந்தப் படத்தில் நடிகை த்ரிஷா சண்டைக் காட்சிகளுக்கு டூப் போடாமல் நடித்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.