பெண்ணியம் பேசுகிறதா.. இல்லை வெறுமனே வந்த வீராப்பா? 90ML படத்தின் திரை விமர்சனம்!

0
500

பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்து கிட்டத்தட்ட இரண்டு வருடம் கழித்து ஓவியா நடித்து வெளிவந்த படம் 90ml. இந்த படத்தின் டிரைலர் Sneak Peak என பல காட்சிகள் வெளியாகி சர்ச்சை மேல் சர்ச்சையாகி பிரமோஷன் செய்யப்பட்டது. இந்த படம் உண்மையில் பெண்ணியம் பற்றி பேசி உள்ளதா என்பதைப் பார்ப்போம்.

கதைக்களம்

சொந்த வாழ்க்கையில் தனி பட்ட கஷ்டங்களை அனுபவித்து வரும் நான்கு பெண்களை அந்தப் பிரச்சினையிலிருந்து
ஓவியா எப்படி விடுவிக்கிறார் என்பதே கதைக்கரு. இந்த படத்தில் தாமரை, காஜல், பாரு, சுகன்யா என்ற நான்கு தோழிகள் இருக்கின்றனர். இந்த நால்வருக்கும் ஒரு பொதுவான தோழி உள்ளார். அவர் தான் ஓவியா என்ற ரீட்டா.

ரீட்டா திருமணம் செய்து கொள்ளாமல் தன் காதலருடன் தன் இஷ்டப்படி வாழ்ந்து வாழ்வை கழித்து வருகிறார். நால்வருக்கும் நான்கு வகையான பிரச்சனைகள் உள்ளது. இதில் தாமரை குடிப்பழக்கத்திற்கு மிகவும் அடிமையானவர். இதனால் அவருக்கும் அவரது கணவருக்கும் குடும்ப வாழ்க்கையில் எப்போதும் பிரச்சனை மட்டுமே உள்ளது.

அடுத்த தோழி காஜல் குடும்பத்தில் எப்போதும் பிரச்சனை தான். காஜலின் கணவருக்கும் இன்னொரு பெண்ணுக்கும் கள்ளத்தொடர்பு உள்ளது. இதனால் இருவரும் வாழ்க்கையில் மகிழ்ச்சி இல்லாமல் வாழ்ந்து வருகின்றனர்.

மற்றொரு தோழி பாரு மற்றும் அவரது கணவருக்கும் அவர் சங்கடப்படும் வகையில் பிரச்சனை உள்ளது. பாருவின் கணவர் திருமணத்திற்கு முன்பு ஒரு பெண்ணை காதலித்து இருக்கிறார். அந்த பெண்ணின் நினைவியிலேயே தற்போது வரை வாழ்ந்து வரும் அவர்களுடன் சந்தோஷமாக வாழ முடியவில்லை.

கடைசியாக இருக்கும் சுகன்யா, இவர் ஓரினச்சேர்க்கையாளர். இவர் வேறு ஒரு பெண்ணை காதலிக்கிறார். ஆனால் தற்போது உள்ள சமூகம் அந்த காதலையும், திருமணத்தையும் ஏற்க மறுக்கின்றது.

இந்த நான்கு பெண்களுக்கும், ரீட்டா வாழ்க்கைப் பிரச்சனைகளை சமாளிப்பது எப்படி எனவும், எப்படி தனக்கு பிடித்த மாதிரி வாழ்வது என்பது பற்றியும் சொல்லிக் கொடுக்கிறார் .இதனால் நால்வரும் ஓவியாவுடன் இணைந்து குடி, கஞ்சா என அவர்களது இஷ்டத்திற்கு வாழ்கின்றனர். இறுதியில் இந்த நால்வரின் பிரச்சனையும் தீர்ந்ததா என்பதுதான் கதை.

கதையில் உள்ள பாசிட்டிவ்

படத்தில் சொல்லிக் கொள்ளும்படி அளவிற்கு பெரிதாக ஏதுமில்லை. வழக்கமான கமர்சியல் படங்களை போலவே அடல்ட் கமர்சியல் படமாக இது வந்துள்ளது. பெண்களின் மீதான சமூக அக்கறையும் அல்லது பெண்ணியம் பற்றிய தெளிவான கருத்தையும் இந்த படம் எடுத்து வைக்கவில்லை என்பது மட்டும் உறுதி. படத்தின் ரிலீசுக்கு முன்னர் இயக்குனர் பேசியதை பார்த்தால் பெண்ணியம் பற்றி பெரிதாக ஏதோ பேசப்பட்டுள்ளது என்று நினைத்தவர்களுக்கு எல்லாம் பல்ப் மட்டுமே மிச்சம். ஆனால் கடைசிவரை இயக்குனர் என்ன சொல்ல வருகிறார் என்பது யாருக்கும் தெரியவில்லை .

படத்தின் நெகட்டிவ்

இந்த இளைய பெண்கள் சமுதாயத்திற்கு சீர்கேடு என்று பலரும் நினைக்கின்றனர். பெண் சுதந்திரம் என்று பேசி ஆண்களுக்கு நிகராக குடி பழக்கத்தை கற்றுக் கொள்வதும் சுற்றியுள்ளவர்களை பற்றி பெரிதாக ஏதும் யோசிக்காமல் கண்ட போக்கில் கஞ்சா அடித்துவிட்டு வாழ்வது என்றும் படம் எடுக்கப்பட்டுள்ளது. இயக்குனர் எப்படி இதனை பெண் சுதந்திரம் என்று கூறுவார் என்று தெரியவில்லை. ஆக்கபூர்வமான விஷயங்கள் ஏதும் பெண்களுக்கு இந்த படத்தில் கிடைக்கவில்லை என்பது நிச்சயம்.

Cinema Medai Review – 2/5