படுக்கையறையில் இருந்த 6 அடி நீள பாம்பு அதிர்ந்து போன பெண்..!

0
99

ஹரியானா மாநிலத்தின் சுல்தான்பூரில் ராஜேஷ் , மஞ்சலி தம்பதிக்கு ஒரு மகன் , ஒரு மகள் உள்ளனர். ராஜேஷ் இரவு வேலைக்கு சென்றுவிட்டார். இதைதொடர்ந்து தனது மகன், மகளுடன் மஞ்சலி உறங்கிக் கொண்டிருந்தார். இரவு 1 மணிக்கு கண்விழித்தபோது குழந்தைகள் படுத்துக் கொண்டிருந்த படுக்கை அறையில் 6 அடி நீளம் உள்ள பாம்பு ஒன்று படுத்து இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

பின்னர் உடனடியாக இரவுக்கு வேலைக்கு சென்றிருந்த தனது கணவருக்கு போன் செய்து விவரத்தை சொன்னார். இதை  தொடர்ந்து குழந்தைகளை அறையில் இருந்து பாதுகாப்பாக வெளியே அழைத்து வந்தார். சிறிது நேரத்தில் ராஜேஷ் வீட்டிற்கு வந்த பாம்பை விரட்ட முயற்சி செய்தும் முயற்சி வீணானது.

இதை அடுத்து  வனத்துறையினருக்கு  தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர் படுக்கையறையில் இருந்த பாம்பை பாதுகாப்பாக பிடித்து சென்றனர்.