‘அடுத்த ஆண்டு ஏப்ரல் – மே மாதம் ஐபிஎல் 2021 சீசன் உறுதியாக நடத்தப்படும்’ – சவுரவ் கங்குலி

    0
    34
    Former cricketer Sourav Ganguly and newly-elected president of the Board of Control for Cricket in India (BCCI) smiles during a press conference at the BCCI headquarters in Mumbai on October 23, 2019. - Ganguly was unanimously elected on October 23 as president of India's troubled cricket board, the sport's most powerful body. (Photo by Punit PARANJPE / AFP) (Photo by PUNIT PARANJPE/AFP via Getty Images)

    ஐபிஎல் 2021 சீசனுக்கான போட்டிகள் அடுத்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் உறுதியாக நடைபெறும் என பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

    கொரோனாவால் 2020 சீசனுக்கான ஐபிஎல் போட்டிகள் தள்ளிப்போன நிலையில் இதை உறுதிப்படுத்தியுள்ளார் சவுரவ் கங்குலி .

    “நிச்சயம் 2021 ஐபிஎல் ஏப்ரல், மே மாதங்களில் நடத்தப்படும். கூடுமான வரையில் போட்டிகளை இந்தியாவில் நடத்தவே திட்டமிட்டுள்ளோம். அதோடு அடுத்து வரும் நாட்களில் இந்தியா – இங்கிலாந்து மோதும் கிரிக்கெட் தொடரும் இந்தியாவில் நடைபெற உள்ளது என தெரிவித்துள்ளார்