இந்த வருடம் 200 கோடி வசூலை கடந்த தென்னிந்திய திரைப்படங்கள் எவையெல்லாம் தெரியுமா?!

0
198

இந்த வருட தொடக்கமே தமிழ் சினிமாவிற்கு பெரிய வசூல் வேட்டையாக அமைந்தது. அதுவும் ஒரே நாளில் இரு பெரிய நட்சத்திரங்களின் படம் ரிலீஸ் ஆகி, இரண்டுமே பெரிய ஹிட் ஆனது. இதில் சூப்பர் ஸ்டார் நடித்த பேட்ட படமும், தல அஜித் நடித்திருந்த விஸ்வாசம் திரைப்படமும் 200 கோடி வசூலை தாண்டி சாதனை படைத்தது.

அதே போல, தெலுங்கில் பெரிய எதிர்பார்ப்போடு வந்து, ரசிகர்களை திருப்தி படுத்த தவறிய சாஹோ திரைப்படமும் 200 கோடி வசூலை தாண்டியது. அண்மையில் அக்டோபர் 2ஆம் தேதி தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிப்பில் வெளியாகி பெரிய வரவேற்பை பெற்று வரும் சைரா நரசிம்ம ரெட்டி திரைப்படமும் தற்போது 200 கோடி வசூலை தண்டி ஓடிக்கொண்டிருக்கிறது.