சூரியிடம் 2.70 கோடி பண மோசடி…நடிகர் விஷ்ணு வெளியிட்ட பரபரப்பு அறிக்கை

0
65

பிரபல நடிகரும் நகைச்சுவை நடிகருமான சூரிக்கு ஒரு அதிர்ச்சியூட்டும் சம்பவம் இன்று அக்டோபர் 9 ஆம் தேதி வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சமீபத்திய தகவல்களின்படி, 2.70 கோடி மதிப்புள்ள நிலம் வாங்கியதில் நடிகர் சூரி ஏமாற்றப்பட்டுள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது.

பின்னர் நடிகர் சென்னை அடையார் காவல் நிலையத்தை அணுகியதாக கூறப்படுகிறது, அங்கு அவர் 3 பேர் மீது புகார் அளித்துள்ளார், அதில் ஒரு திரைப்பட தயாரிப்பாளரும் ஒரு நிலத்தை வாங்குவதற்கான போலிக்காரணத்தில் பெரும் பணத்தை மோசடி செய்ததற்காக ஒரு திரைப்பட தயாரிப்பாளரை உள்ளடக்கியுள்ளார். மேலும் விவரங்கள் இன்னும் காத்திருக்கின்றன.

ரமேஷ் குடவாலா முன்னாள் டிஜிபியாக இருப்பதால் போலீசார் நடவடிக்கை எடுக்காமல் இருந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நடிகர் சூரி வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கில் முன்னாள் டிஜிபியாக இருந்த ரமேஷ் குட்வாலா ஏமாற்றியதும், நடிகர் விஷ்ணு வங்கி கணக்கில் இருந்து பணம் நடிகர் சூரிக்கு கொடுக்கப்பட்டது தொடர்பான ஆவணங்கள் வைத்து வாதங்களை நடிகர் சூரி தரப்பில் முன்வைத்தனர்.

அதன் பின் 50 லட்ச ரூபாய்க்கு மேல் மோசடி இருப்பதால் வழக்கு சென்னை மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட உள்ளது. சென்னை மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்ட பிறகு முதற்கட்ட விசாரணையை நடிகர் சூரியிடம் நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. காவல்துறை உயர் அதிகாரி என்பதால் மத்திய குற்றப்பிரிவு போலீசார் தயங்குவதாக நடிகர் சூரி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நில மோசடி விவகாரத்தில் போலியாக ஆவணம் உருவாக்கி கோடிக்கணக்கில் முன்னாள் டிஜிபியே ஈடுபட்டது காவல்துறை மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், இவ்விவகாரம் தொடர்பாக நடிகர் விஷ்ணு விஷால் பதில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.பொய்யான குற்றச்சாட்டை படித்ததும் தனக்கு அதிர்ச்சி ஏற்பட்டதாகவும், சட்ட ரீதியாக சந்திக்க இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.