Connect with us

49 ரன்னில் ரிட்டயர்ட் ஹர்ட்டான க்ருணல் பாண்ட்யா… சந்தேகம் எழுப்பும் நெட்டிசன்கள்

Sports

49 ரன்னில் ரிட்டயர்ட் ஹர்ட்டான க்ருணல் பாண்ட்யா… சந்தேகம் எழுப்பும் நெட்டிசன்கள்

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தின்போது லக்னோ அணியின் கேப்டன் க்ருணல் பாண்ட்யா ரிட்டயர்ட் ஹர்ட் முறையில் வெளியேறினார். அவர் 49 ரன்கள் எடுத்திருந்தபோது களத்தை விட்டு வெளியேறிய நிலையில் அதுகுறித்து நெட்டிசன்கள் சந்தேகம் எழுப்பியுள்ளனர். ஏனென்றால் 42 பந்துகளை எதிர்கொண்டு பாண்ட்யா தடுமாறிக் கொண்டிருந்ததால் அவருக்கு உண்மையிலேயே சோர்வு ஏற்பட்டு விட்டதா அல்லது அணி ரன்களை குவிக்க வேண்டும் என்ற காரணத்திற்காக அவர் வெளியேறினாரா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

லக்னோவில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து லக்னோ அணியின் தொடக்க வீரர்களாக தீபக் ஹூடா மற்றும் குவின்டன் டி காக் களத்தில் இறங்கினர். தீபக் ஹூடா 5 ரன்கள் எடுத்திருந்தபோது பெரன்டாஃப் பந்துவீச்சில் டிம் டேவிட்டிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். கடந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய பிரிரக் மன்காட் பெரன்டாஃப் வீசிய முதல் பந்திலேயே இஷான் கிஷனிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

சிறிது நேரம் தாக்குப் பிடித்த குவின்டன் டி காக் 16 ரன்கள் எடுத்திருந்தபோது, பியூஷ் சாவ்லாவின் சுழலில் விக்கெட்டை பறி கொடுத்தார். இதனால் 6.1 ஓவரில் லக்னோ அணி 35 ரன்களுக்கு 3 விக்கெட்டை இழந்திருந்தது. இதையடுத்து இணைந்த கேப்டன் க்ருணல் பாண்ட்யா மற்றும் மார்கஸ் ஸ்டாய்னிஸ் இணை பொறுப்புடன் விளையாடி ரன்களை சேர்த்தது. 42 பந்துகளில் 49 ரன்கள் எடுத்திருந்தபோது க்ருணல் பாண்ட்யா ரிட்டையர்ட் ஹர்ட் என்ற முறையில் வெளியேறினார்.

இதுகுறித்து ராஜஸ்தான் அணியின் ஆல் ரவுண்டர் அஷ்வின் கேள்வி எழுப்ப, அவரது பதிவில் சந்தேகம் தெரிவித்து ரசிகர்கள் கமென்ட் செய்துள்ளனர். இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்துள்ள லக்னோ அணி 177 ரன்கள் எடுத்துள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  146 ஆண்டு டெஸ்ட் வரலாற்றில் புதிய சாதனை படைத்த பென் ஸ்டோக்ஸ்…

More in Sports

To Top