Bigboss Tamil 5
பிக் பாஸ் சீசன் 5 பைனலுக்கு சிறப்பு விருந்தினராக வரும் மக்களின் மனம் கவர்ந்த முன்னணி நடிகர்..!
விஜய் தொலைக்காட்சியில் நூறு நாட்களுக்கு மேலாக ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் சீசன் 5வின் பைனல் நிகழ்ச்சி நாளை மாலை 6 மணி முதல் ஒளிபரப்பாக உள்ளது.
ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சியின் பைனல் படப்பிடிப்பு இன்றே பிரமாண்டமான முறையில் நடைபெற்று வருகிறது. இதில் ஏற்கனவே 5வது இடத்தை பிடித்த நிரூப் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிவிட்டார்.

இதனை தொடர்ந்து ராஜு, பிரியங்கா, அமீர் மற்றும் பாவ்னி ஆகிய நால்வரில் ஒருவர் மட்டுமே அந்த பிரமாண்ட டைட்டிலை தட்டி தூக்க உள்ளனர்.
இந்நிலையில் இன்று பிரமாண்டமாக நடைபெற்று வரும் பிக் பாஸ் பைனல் போட்டிக்கு சிறப்பு விருந்தினராக, மக்களின் மனம் கவர்ந்த முன்னணி நடிகரான சிவகார்த்திகேயன் வரவுள்ளாராம்.

அதுமட்டுமில்லாமல் பிக் பாஸ் பைனல் மேடையிலேயே, கமல்ஹாசனின் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பையும் வெளியிடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது .
மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….
