Connect with us

துல்கர் சல்மானின் அடுத்த படத்தின் குழப்பமான டிரெய்லர் இதோ…வீடியோ

Cinema News

துல்கர் சல்மானின் அடுத்த படத்தின் குழப்பமான டிரெய்லர் இதோ…வீடியோ

சன்னி தியோல், பூஜா பட், துல்கர் சல்மான் மற்றும் ஸ்ரேயா தன்வந்தரி நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படமான சுப் படத்தின் தயாரிப்பாளர்கள் இறுதியாக படத்தின் அதிகாரப்பூர்வ டிரெய்லரை வெளியிட்டு உள்ளனர் . ஆர் பால்கி எழுதி இயக்கிய, இந்த வரவிருக்கும் காதல் உளவியல் த்ரில்லர், பழம்பெரும் திரைப்பட தயாரிப்பாளர் குரு தத் மற்றும் அவரது 1959 ஆம் ஆண்டு கிளாசிக் திரைப்படமான காகஸ் கே பூல் ஆகியோருக்கு மரியாதை செலுத்துவதாகும்.

இந்தியாவின் மிகச் சிறந்த இயக்குநரான குரு தத்துக்கு குரு வணக்கம் செலுத்துவதாக இந்த படம் உருவாகி உள்ளது என்கின்றனர். 1959ம் ஆண்டு அவர் இயக்கத்தில் வெளியான ‘Kaagaz Ke Phool’ படத்தின் தழுவலாக இந்த படம் உருவாகி உள்ளது என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. குரு தத் பார்வையில் இருந்தே இந்த படத்தின் நடிகர்கள் தெரிவது போல போஸ்டர்கள் உருவாக்கப்பட்டுள்ளன. ஆசிரியர் தினமான செப்டம்பர் 5ம் தேதி அதன் டிரைலரை படக்குழு வெளியிட்டு உள்ளது .கடந்த ஆண்டு அக்டோபர் 10 ஆம் தேதி புகழ்பெற்ற திரைப்படத் தயாரிப்பாளர் குரு தத்தின் நினைவு நாளில் இப்படம் அறிவிக்கப்பட்டது.

சமீபத்தில் வெளியான துல்கர் சல்மானின் சீதாராமம் திரைப்படம் இந்தியளவில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. துல்கர் சல்மான், மிருணாள் தாகூர் மற்றும் ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட அனைவருமே ரசிகர்களை ஈர்க்கும் வண்ணம் நடித்திருந்தனர். இந்நிலையில், துல்கரின் அடுத்த படமான சுப் நிச்சயம் மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  "ஹரிஷ் கல்யாண், MS பாஸ்கர் இணைந்து நடித்த 'Parking' படத்தின் விமர்சனம் இதோ..!

More in Cinema News

To Top