Connect with us

“KH 234 படத்தின் Shooting எப்போது? இதுதான் காரணமா?!”

Cinema News

“KH 234 படத்தின் Shooting எப்போது? இதுதான் காரணமா?!”

விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ள பிக்பாஸ் நிகழ்ச்சி அக்டோபர் 1ஆம் தேதி முதல் தொடங்க இருக்கும் நிலையில் இந்த நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்க உள்ளார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியால் கமல்ஹாசன் நடிக்க இருக்கும் அவரது 234 படத்தின் படப்பிடிப்பு தாமதம் ஆகுமா என்றால் அது தான் இல்லை என தகவல் வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சி அக்டோபர் 1ஆம் தேதி தொடங்கி மூன்று மாதம் அதில் கமல்ஹாசன் பிசியாக இருந்தாலும் இடையிடையே அவர் ’KH 234’ படத்தின் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டு உள்ளார்.

நவம்பர் முதல் வாரம் ’KH 234’ படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாகவும் இந்த படத்தின் படப்பிடிப்பின் இடையே சனி ஞாயிறு மட்டும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் அவர் கலந்து கொள்வார் என்றும் கூறப்படுகிறது.

இந்திய ராணுவத்தின் கதையம்சம் கொண்ட இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் இந்த படத்தில் 2 பான் இந்திய நடிகர்கள் இணைய வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.

கமல்ஹாசன் மற்றும் எச் வினோத் ஆகியோர் எழுதியுள்ள கதைக்கு திரைக்கதை அமைத்து எச் வினோத் இயக்க உள்ளார். இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப தேர்வுகள் தற்போது நடைபெற்று வருகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  தெலங்கானா சட்டப்பேரவை தேர்தல் - வாக்களித்த சினிமா பிரபலங்களின் வைரல் புகைப்படங்கள்..!!

More in Cinema News

To Top