Connect with us

டாக்டர் படத்தின் ரன்னிங் டைமுடன் வெளியான Official அப்டேட்…உச்சகட்ட எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

Cinema News

டாக்டர் படத்தின் ரன்னிங் டைமுடன் வெளியான Official அப்டேட்…உச்சகட்ட எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

சிவகார்த்திகேயன் தனது படங்களின் மூலம் அனைத்து வகையான பார்வையாளர்களையும் திருப்திப்படுத்தும் முன்னணி ஹீரோக்களில் ஒருவர். மேலும் அவரது நடிப்பில் அடுத்து வரவிருக்கும் த்ரில்லர் படமான ‘டாக்டர்’ அக்டோபர் 9-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் முன்னர் அசத்தலான புதிய ப்ரோமோ வீடியோக்கள் மற்றும் செல்லம்மா பாடல் வீடியோ போன்றவை தொடர்ந்து ட்ரெண்டிங்கில் உள்ளது.

இன்னும் திரைக்கு வர 3 நாளே உள்ள நிலையில் இந்த படத்தின் சென்சார் குறித்த தகவல் வெளியாகி உள்ளது .அதாவது டாக்டர் படத்துக்கு UA சான்றிதழ் கிடைத்து உள்ளது.மேலும் இந்த படத்துக்கு ரன்னிங் டைம் மொத்தமே 2 மணி நேர 28 நிமிடங்கள் ஆகும்.

சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் வழங்கும் டாக்டர் திரைப்படத்திற்கு விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்ய நிர்மல் படத்தொகுப்பு செய்துள்ளார் ராக்ஸ்டார் அனிருத் இசையமைத்துள்ளார். சிவகார்த்திகேயனுடன் இணைந்து பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடிக்க, மிரட்டலான வில்லனாக நடித்துள்ளார் நடிகர் வினய்.

More in Cinema News

To Top