Connect with us

உடல் நலம் மோசமாக இருக்கும் இயக்குனர் விக்ரமனின் மனைவி…கேன்சர் என்று சொல்லி ஏமாற்றிவிட்டார்கள்!

Cinema News

உடல் நலம் மோசமாக இருக்கும் இயக்குனர் விக்ரமனின் மனைவி…கேன்சர் என்று சொல்லி ஏமாற்றிவிட்டார்கள்!

தமிழ் திரைப்பட இயக்குநர் சங்கத்தின் தலைவராக இருக்கும் இயக்குநர் விக்ரமன்மனைவி ஜெயப்பிரியா பல ஆண்டுகளாக படுத்த படுக்கையாக இருக்கிறார். தற்போது அவர் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார்…அது பெரும் கஷ்டத்தை கொடுக்கும் விதமாக அமைந்து இருக்கின்றது…

அந்த வீடியோவில் எனக்கு முதுகு வலி இருந்ததால் மருத்துவமனைக்கு சென்றேன்…சிடி ஸ்கேன் பரிசோதனை செய்துவிட்டு இது கேன்சர் போல இருக்கு இதனால் பயாப்சி செய்து பார்க்கலாம் என்று சொன்னார்கள் எனக்கு அப்போதே மனம் உடைந்துவிட்டது…

முதலில் இந்த அறுவை சிகிச்சைக்கு ஒத்துக்கொள்ளவில்லை கேன்சராக இருக்குமோ என்பதால் என் கணவர் மிகவும் பயந்துவிட்டதால் அறுவை சிகிச்சைக்கு ஒத்துக்கொண்டேன் என்றார் அவர்.

ஆப்ரேஷன் வெறும் அரைமணி நேரம் மட்டுமே நடக்கும் என்று சொன்னார்கள்.ஆனால் மூன்றரை மணி நேரம் நடந்தது.அதுவே எனக்கு வேதனை அளித்தது…பத்து நாள் கழித்து என் கால் விரலை என்னால் அசைக்கவே முடியவில்லை.பின் ஒரு மாதம் மருத்துவமனையில் வைத்துவிட்டு வீட்டுக்கு போய் பிசியோதெரப்பி செய்து கொள்ளுங்கள் என்று அனுப்பி வைத்துவிட்டார்கள்…என்னால் எதையுமே ஏற்று கொள்ள முடியவில்லை…

மருத்துவமனை தப்பான ஆப்ரேஷன் செய்துவிட்டு,அதன் பிறகு எனக்கு எந்த விதமான உதவியையும் செய்யவில்லை.. என்னை ஏமாற்றி விட்டார்கள் என கண் கலங்கிவிட்டார் விக்ரமனின் மனைவி…நானும் சரியாகிவிடும் என்ற நம்பிக்கையில் அனைத்துவிதமான மருத்துவத்தையும் செய்துவிட்டேன்.

ஆனால் எனக்கு இதுக்கு மேல என்ன செய்வது என்று தெரியவில்லை வீட்டில் என்னுடன் எப்போதும் இரண்டு நர்சுகள் இருக்கிறார்கள் பரதநாட்டிய கலைஞரான என்னால் எழுந்துக்கூட நிற்க முடியவில்லை இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை யூரியன் பேக் பயன்படுத்த வேண்டி இருக்கிறது..இப்படி ஒரு மோசமான நிலயிக்கு தள்ளப்பட்டுள்ளேன்..யாருக்கு என்ன செய்தேன்…

என்னை நினைத்து என் கணவர் மிகவும் வேதனைப்படுகிறார் அவருக்கு நிறைய கஷ்டம் இருக்கின்றது…கஷ்டப்பட்டு சம்பாதித்த ஒவ்வொரு சொத்தையும் விற்றுத்தான் எனக்கான மருத்துவ உதவியை செய்து வருகிறார் அவர்….இப்போதும் சூர்யவம்சம்2 திரைப்படத்தை எடுக்கும்படி கேட்கிறார்கள் ஆனால் என்னை தனியாக விட்டு போகமாட்டேன் என சொல்லி வருகிறார் அவர்…இப்படி ஒரு மோசமான நிலை தான் என கண் கலங்கியுயள்ளார்…விக்ரமனின் மனைவி ஜெயப்பிரியா அவர்கள்…

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  "பருத்திவீரன் பிரச்சனையில் புதிய திருப்பம்! வைரலாகிவரும் ஆதாரம்..! இதற்கு ஞானவேல்ராஜா என்ன சொல்லப்போகிறார்?!"

More in Cinema News

To Top