Connect with us

“கல்லறையில் பொறிக்கும் எழுத்துகளில் கூட நீ நீயாகத்தான் இருக்க வேண்டும்!” செல்வராகவனின் Viral Tweet!

Cinema News

“கல்லறையில் பொறிக்கும் எழுத்துகளில் கூட நீ நீயாகத்தான் இருக்க வேண்டும்!” செல்வராகவனின் Viral Tweet!

துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான செல்வராகவன், அதன்பின்னர் காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன, இரண்டாம் உலகம், என்ஜிகே, நெஞ்சம் மறப்பதில்லை, நானே வருவேன் உள்ளிட்ட பல ஹிட் படங்களை கொடுத்தார். பிறகு அவரது படங்களுக்கு என தனி ரசிகர் பட்டாளமே உருவானது.

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக வலம் வரும் செல்வராகவன் கடைசியாக தனுஷ் நடிப்பில் வெளியான ‘நானே வருவேன்’ படத்தை இயக்கியிருந்தார். இதனிடையே நடிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார். இவர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்த ‘பகாசூரன்’ சமீபத்தில் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றது. தற்போது 7ஜி ரெயின்போ காலனி படத்தின் இரண்டாம் பாகத்தில் செல்வராகவன் மும்முரம் காட்டி வருவதாக கூறப்படுகிறது.

இதனிடையே நடிப்பிலும் கவனம் செலுத்தி வரும் செல்வராகவன் பீஸ்ட், சாணிக் காயிதம், , பகாசூரன் போன்ற படங்களில் நடித்து வரவேற்பை பெற்றார். தொடர்ந்து ஆதிக் ரவிசந்திரன் இயக்கத்தில் விஷால் நடிப்பில் உருவாகி வரும் மார்க் ஆண்டனி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் இயக்குநர் செல்வராகவன் அடிக்கடி ட்விட்டரில் தனது அனுபவம் குறித்தும், பல நேரங்களில் துன்பத்தில் இருப்பவர்களுக்கு கைக்கொடுக்கும் விதமாகவும் அவர் எழுத்துகள் ட்விட்டர் தளத்தில் அதிகமாக வரும்.

அவர் சொல்கிறார் என கொஞ்சம் , இவர் சொல்கிறார் என கொஞ்சம் என்று நம்மை நாம் மாற்றிக் கொண்டே போனால் இறுதியில் மண்டை ஓடு கூட மிஞ்சாது. கல்லறையில் பொறிக்கும் எழுத்துகளில் கூட நீ நீயாகத்தான் இருக்க வேண்டும். இந்நிலையில் செல்வராகவன் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது. அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது, அவர் சொல்கிறார் என கொஞ்சம் , இவர் சொல்கிறார் என கொஞ்சம் என்று நம்மை நாம் மாற்றிக் கொண்டே போனால் இறுதியில் மண்டை ஓடு கூட மிஞ்சாது. கல்லறையில் பொறிக்கும் எழுத்துகளில் கூட நீ நீயாகத்தான் இருக்க வேண்டும் என்று அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.

More in Cinema News

To Top