Connect with us

நாளை வெளியாகிறது பகாசூரன் டிரெய்லர்.. படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!

Cinema News

நாளை வெளியாகிறது பகாசூரன் டிரெய்லர்.. படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!

இயக்குனர் செல்வராகவன் ஹீரோவாக நடித்துள்ள பகாசூரன் படத்தின் டிரெய்லர் நாளை வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பழைய வண்ணாரப்பேட்டை படத்தின் மூலம் தனி கவனம் ஈர்த்த இயக்குனர் மோகன் ஜி, அடுத்து திரௌபதி மற்றும் ருத்ரதாண்டவம் ஆகிய படங்களை இயக்கினார். இந்த படங்கள் விமர்சன ரீதியாக சர்ச்சையில் சிக்கினாலும், வசூல் ரீதியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த படங்களை அடுத்து தற்போது பகாசூரன் என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தின் இறுதிக்கப்பட்ட பணிகள் நடந்து வரும் நிலையில், பகாசூரன் படம் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த படத்தில் ஹீரோவாக இயக்குனர் செல்வராகவன் நடித்துள்ள நிலையில், பல முக்கிய நட்சத்திரங்களும் இந்த படத்தில் நடித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், தற்போது படத்தின் புரமோஷன் பணிகளிலும் மோகன் ஜி ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் ஏற்கனவே படத்தின் டீசர் மற்றும் ஒரு பாடல் வெளியிடப்பட்டு, நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் படத்தின் பகாசூரன் படத்தின் டிரெய்லரை நாளை வெளியிட உள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். மோகன் ஜி முன்னர் எடுத்த திரைப்படங்களை போலவே இதிலும், சமூகத்தில் நடக்கும் ஒரு பிரச்சனையை மையமாக வைத்து எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக இருக்கும் செல்வராகவன், தற்போது நடிப்பிலும் ஆர்வம் காட்டி வருகிறார். சமீபத்தில் அவரது நடிப்பில் வெளிவந்த சாணி காயிதம், பீஸ்ட், நானே வருவேன் போன்ற படங்களில் செல்வராகவனின் நடிப்பு பாராட்டை பெற்றது குறிப்பிடத்தக்கது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

To Top