Connect with us

“இளைப்பாறுங்கள் அப்பா” மாரி செல்வராஜ் இரங்கல் Post!

Cinema News

“இளைப்பாறுங்கள் அப்பா” மாரி செல்வராஜ் இரங்கல் Post!

கடந்த 2018ஆம் ஆண்டு பா.ரஞ்சித் தயாரிப்பில் வெளியான பரியேறும் பெருமாள் திரைப்படத்தில் கதிர், ஆனந்தி, யோகிபாபு, தங்கராஜ் உள்ளிட்டோர் நடித்தனர். இத்திரைப்படத்தை மாரி செல்வராஜ் இயக்கினார். இத்திரைப்படம் ரசிகர்களை கவர்ந்து, நல்ல வெற்றியை பெற்றது.

இப்படத்தில் பரியன் எனும் பிரதான கதாபாத்திரத்தின் தந்தையாக நடிகர் தங்கராஜ் நடித்திருப்பார். தெருக்கூத்து கலைஞரான நெல்லை தங்கராஜ் என அழைக்கப்படும் இந்த படத்திலும் தெருக்கூத்து கலைஞராக நடித்திருப்பார். காய்கறி விற்று வந்த இவருக்கு நெல்லை மாவட்ட நிர்வாகம் மற்றும் முற்போக்கு எழுத்தாளர் சங்கம் இணைந்து அவருக்கு புதிய வீடு கட்டி கொடுத்திருந்தது குறித்த செய்திகள் வெளியாகி இருந்தன.

இந்நிலையில் இவர் இன்று அதிகாலை உடல்நலக்குறைவால் காலமானார். இவரது மறைவுக்கு பலர் தங்களது இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.

பரியேறும் பெருமாள் தங்கராஜை அறிமுகம் செய்த இயக்குனர் மாரி செல்வராஜ், “ஆங்காரமாய் ஆடியது போதும் இளைப்பாறுங்கள் அப்பா 💔 என் கடைசி படைப்பு வரையிலும் உங்கள் பாதச்சுவடிருக்கும் .. பரியேறும் பெருமாள்.” என இரங்கல் தெரிவித்துள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

Advertisement
 

Trending

 
Advertisement
To Top