Connect with us

தன்னை பெற்ற அப்பாவுக்கு பெருமை வாங்கி கொடுத்த இயக்குனர் வினோத்!!

Cinema News

தன்னை பெற்ற அப்பாவுக்கு பெருமை வாங்கி கொடுத்த இயக்குனர் வினோத்!!

போனி கபூர் தயாரிப்பில், இயக்குனர் H. வினோத் இயக்கத்தில், நிரவ் ஷா ஒளிப்பதிவில் அஜித் நடிப்பில் நேர்கொண்ட பார்வை திரைப்படம் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்றது. நேர்கொண்ட பார்வை படத்தின் வெற்றிக்கு பிறகு மீண்டும் அதே கூட்டணி வலிமை படத்தில் இணைந்தது.அதன் பிறகு இப்போது இணைந்து ஹிட் அடித்த படம் துணிவு…

கடந்த இரு வாரங்களாக திரையரங்கில் ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம்.அஜித் நடிப்பில் எச். வினோத் இயக்கத்தில் வெளிவந்த இப்படம் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றுள்ளது.

அதனை தாண்டி அஜித் அவர்களை இப்படி பார்ப்பதற்கு பல ரசிகர்கள் காத்திருந்தனர் அதனால் அவர்களுக்கு கிடைத்த வெற்றி என சொல்லும் அளவு ஹிட் அடித்தது இந்த படம்.

வலிமை படம் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் (24.02.2022) திரையரங்கில் வெளியானது. தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் என 4 மொழிகளிலும் ரிலீசானது. விமர்சகர்கள் மத்தியிலும், ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்று 200 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்து வெற்றி அடைந்தது வலிமை படம்.

இதுவரை தமிழகத்தில் ரூ. 112 கோடி வரை வசூல் செய்துள்ள இப்படம் அஜித்தின் திரை வாழ்க்கையில் இதுவரை கண்டிராத பல சாதனைகளை நிகழ்த்தியுள்ளது.அதனை போல பல திரையரங்க உரிமையாளர்கள் மகிழ்ச்சியிலும் உள்ளனர்..

உலகளவில் ரூ. 200 கோடியை துணிவு படம் கடந்துவிட்டதாகவும் அண்மையில் தெரியவந்தது.

இந்நிலையில், துணிவு படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக இயக்குனர் எச். வினோத்தின் அப்பாவை திரையரங்கிற்கு அழைத்து மரியாதை செய்துள்ளனர்.அது இன்று பலரால் பேசப்பட்டு வருகிறது அதனை போல அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை ரசிகர்கள் வைரல் செய்து வருகின்றனர்..

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

To Top