Connect with us

நடிகர் சங்கத்திலிருந்து பாக்யராஜ் நீக்கம்..!! கோலிவுட்டில் அதிர்ச்சி..!!

Director_Bhagyaraj

Cinema News

நடிகர் சங்கத்திலிருந்து பாக்யராஜ் நீக்கம்..!! கோலிவுட்டில் அதிர்ச்சி..!!

தென்னிந்திய நடிகர் சங்கத்தில் இருந்து நடிகரும் இயக்குனருமான பாக்யராஜ் மற்றும் உதயா ஆகியோர் நீக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2019 ஆம் ஆண்டு தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் பாக்யராஜ் தலைமையிலான சங்கரதாஸ் அணியும், நாசர் தலைமையிலான பாண்டவர் அணியும் மோதின. தேர்தல் முடிந்த நிலையில், தேர்தலில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கையை நடத்தக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்தது.

இதனால் கடந்த இரண்டரை ஆண்டுகளாக நடிகர் சங்க தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்படாமலேயே இருந்த நிலையில், ஒருவழியாக கடந்த மார்ச் 20ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டன. அதில் நடிகர் நாசர் தலைமையிலான பாண்டவர் அணி வெற்றி பெற்றது.

இதையடுத்து கடந்த ஆகஸ்ட் மாதம் நடிகர் சங்கம் சார்பில், புதிதாக பொறுப்பேற்ற நிர்வாகம் மற்றும் நடிகர் சங்க தேர்தல் குறித்து பொய்யான தகவல்களை சங்க உறுப்பினர்களுக்கு கடிதம் மூலம் பரப்பிவருவதாக குற்றம் சாட்டப்பட்டு விளக்கம் அளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பட்டது. ஏ.எல்.உதயாவுக்கும் இதேபோல் கடிதம் அனுப்பப்பட்டு, இருவரையும் 15 நாட்களுக்குள் விளக்கம் அளிக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டது.

இந்நிலையில் தென்னிந்திய நடிகர் சங்க விதி 13’ன் படி சங்கத்திற்கு எதிராக உறுப்பினர்கள் யாரும் செய்தி வாயிலாகவோ அல்லது உறுப்பினர்களுக்கு கடிதம் வாயிலாகவோ கருத்து சொல்லக் கூடாது என்பதால், நடிகர் சங்கத்தில் இருந்து பாக்யராஜ் மற்றும் உதயா ஆகிய இருவரையும் ஆறு மாத காலத்திற்கு நீக்கி உத்தரவிட்டுள்ளது.

திரைக்கதை ஜாம்பவான் பாக்யராஜ் நடிகர் சங்கத்தில் இருந்து நீக்கப்பட்ட செய்தி கோலிவுட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

Advertisement
 

Trending

 
Advertisement
To Top