Connect with us

வணங்கான் படத்திலிருந்து சூர்யா நீக்கம்.. இயக்குனர் பாலா அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!

Cinema News

வணங்கான் படத்திலிருந்து சூர்யா நீக்கம்.. இயக்குனர் பாலா அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!

இயக்குனர் பாலா-நடிகர் சூர்யா கூட்டணியில் தயாராகி வந்த வணங்கான் படத்திலிருந்து நடிகர் சூர்யாவை நீக்குவதாக இயக்குனர் பாலா தெரிவித்துள்ளார். அதே சமயம் வணங்கான் பட வேலைகள் தொடர்வதாக கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு பாணியை அமைத்துக் கொண்டு, அதன்படி தரமான படங்களை இயக்கி தனி ரசிகர் பட்டாளத்தை கொண்டிருப்பவர் தான் இயக்குனர் பாலா. நடிகர் விக்ரமை வைத்து இவர் இயக்கிய சேது திரைப்படம் அன்றைய காலகட்டத்தில் இந்திய அளவில் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தது. மேலும் இந்த படத்திற்காக பாலாவிற்கு தேசிய விருதும் கிடைத்தது.

அதைத் தொடர்ந்து நந்தா, பிதாமகன், நான் கடவுள், அவன் இவன் போன்ற பல தரமான படங்களை இயக்கி, தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குர்களில் ஒருவராக வலம் வந்தார் பாலா. ஆனால், சமீபகாலமாக பாலா இயக்கத்தில் வெளியான படங்கள் எதுவும் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இதனால் பாலா மிகுந்த மன உளைச்சலில் இருந்த நிலையில் தான், சூர்யாவுடன் வணங்கான் பட வாய்ப்பு வந்தது.

இந்த படத்தை சூர்யாவின் 2டி எண்டெர்டைன்மெண்ட் நிறுவனமே தயாரிக்கும் நிலையில், சூர்யாவை வைத்து வணங்கான் படத்திற்கான ஷூட்டிங்கையும் பாலா தொடங்கினார். ஆனால் ஷூட்டிங் தொடங்கிய சில தினங்களிலேயே படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. சூர்யா மற்றும் பாலா இடையே மோதல் ஏற்பட்டு தான் படம் நின்றதாக கோடம்பாக்க வட்டாரங்களில் பேசப்பட்டது.

ஆனால் அது வெறும் வதந்தி என படக்குழு மறுத்து வந்தாலும், வணங்கான் அதற்கு பிறகு மீண்டும் ஷூட்டிங் போகவே இல்லை. இந்நிலையில், பாலா சூர்யா அறிவுரையின் பேரில் வணங்கான் படத்தின் கதையை மாற்றி எழுதி வருகின்றார் எனவும் தகவல் வந்தது.

இந்நிலையில் தற்போது அதிரடி அப்டேட்டாக, இயக்குனர் பாலா வணங்கான் படத்திலிருந்து சூர்யாவை நீக்குவதாக அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளார். கதையில் செய்யப்பட்ட சில மாற்றங்களால் இனி வணங்கான் சூர்யாவிற்கு பொருத்தமாக இருக்காது என எண்ணுவதால் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார். அதே நேரத்தில் வணங்கான் பணிகள் தொடரும் என கூறியுள்ளார்.

இதனால் வேறு ஒரு நடிகரை வைத்து, வணங்கான் படத்தை தொடர பாலா திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  "இனி நான் இதையும் செய்வேன்…ரசிகர்களுக்கு அதிர்ச்சி தகவல் சொல்லிய நடிகர் விஜய் ஆண்டனி.."

More in Cinema News

To Top