Connect with us

“துருவ நட்சத்திரம் ரிலீஸால் சிவகார்த்திகேயனுக்கு இப்படியொரு சிக்கல்…வருத்தத்தில் Sk Fans”

Cinema News

“துருவ நட்சத்திரம் ரிலீஸால் சிவகார்த்திகேயனுக்கு இப்படியொரு சிக்கல்…வருத்தத்தில் Sk Fans”

பொன்னியின் செல்வன் படங்களில் ஆதித்த கரிகாலனாக மிரட்டிய சியான் விக்ரம் அடுத்ததாக பா. ரஞ்சித் இயக்கத்தில் தங்கலானாக நடித்து வருகிறார்.

சியான் விக்ரமின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியான மேக்கிங் வீடியோவில் சியான் விக்ரமின் லுக்கை பார்த்தே ரசிகர்கள் மிரண்டு போன நிலையில், ஷூட்டிங் ஸ்பாட்டில் ஏற்பட்ட விபத்து காரணமாக விக்ரமுக்கு விலா எலும்பில் அடிபட்டதாக தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில், அந்த கேப்பை பயன்படுத்திக் கொண்டு ஓய்வெடுத்து வந்த விக்ரம் கவுதம் மேனனுக்காக துருவ நட்சத்திரம் படத்தின் இறுதிக்கட்ட காட்சிகளையும் நடித்து கொடுத்து விட்டார் எனக் கூறுகின்றனர். மேலும், போஸ்ட் ப்ரொடக்‌ஷன்கள் நிறைவடைந்து படம் ரிலீஸுக்கே ரெடியாகி விட்டதாம்.

வரும் ஜூலை மாதம் 14ம் தேதி ஜான் ரசிகர்களை சந்திப்பார் என தகவல்கள் சோஷியல் மீடியாவில் டிரெண்டாகி வருகின்றன.

#DhruvaNatchathiram ஹாஷ்டேக்கையும் ரசிகர்கள் தெறிக்கவிட்டு வருகின்றனர். செம ஸ்டைலிஷ் ஆன ஏஜென்ட்டாக சியான் விக்ரமை இந்த படத்தில் செதுக்கி இருக்கிறார் கவுதம் மேனன்.

ரிது வர்மா, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி உள்ள இந்த படம் சியான் விக்ரமுக்கு இன்னொரு சூப்பர் ஹிட் படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் புதிய ட்ரெய்லர் ஒன்றும் ரிலீஸ் செய்யப்பட்டு அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்கின்றனர்.

யான் விக்ரமின் துருவ நட்சத்திரம் வரும் ஜூலை 14ம் தேதி வெளியானால் அதே நாளில் ரிலீஸ் தேதியை அறிவித்துள்ள சிவகார்த்திகேயனின் மாவீரன் படத்துக்கு பெரிய சிக்கல் ஏற்படும் என்கின்றனர் பொறுத்திருந்து பார்ப்போம்..

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  "என் Anchoring கனவை நாசமாக்கியதே அவங்க தான்..! மனம் வருந்திய VJ பாவனா!"

More in Cinema News

To Top