Connect with us

நான் வீழ்வேனென்று நினைத்தாயோ…தல தோனி 2024 ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவாரா..?மாட்டாரா?

Sports

நான் வீழ்வேனென்று நினைத்தாயோ…தல தோனி 2024 ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவாரா..?மாட்டாரா?

இந்த வருடத்தில் வரும் டிசம்பர் மாதம் ஐபிஎல் ஏலம் நடைபெற இருக்கின்றது…இந்த ஏலத்திற்கு முன்பு சென்னை சூப்பர் கிங்ஸ் இன் கேப்டன் தோனி தாம் வரும் சீசனில் விளையாடுவேனா இல்லை மாட்டேனா என்பது குறித்து அறிவிக்க உள்ளார்.அதை ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்த்து இருக்கின்றனர் என்று தான் சொல்லவேண்டும்..

ஒருவேளை தோனி விளையாடவில்லை என்றால் அதற்கு ஏற்றார் போல் வீரர்களை தேர்வு செய்ய வேண்டும்.என்ற நிலையும் இருக்கின்றது..இதனால் தோனி என்ன முடிவு எடுக்கப் போகிறார் என்பது குறித்து தெரிந்து கொள்ள ரசிகர்கள் காத்திருந்தனர்.

இந்த நிலையில் சமீபத்தில் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தோனி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு தங்களுடைய வாழ்க்கை எந்த அளவுக்கு மாறி இருக்கிறது என கேட்ட கேள்விக்கு செமயான பதில் ஒன்றை அளித்தார் அவர்…

அதில் தாம் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விலகி இருந்தாலும் இன்னும் ஐபிஎல் தொடரில் விளையாடுகிறேன்.தற்போது எனக்கு 42 வயது ஆகிறது வரும் ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்காக என் உடல் தகுதியை நான் கடைப்பிடித்து வருகிறேன்..என எப்போதும் போல செம கூல் பதிலை சொல்லி இருந்தார் அவர்…

அதனால் இளைஞர்கள் என்ன செய்கிறார்களோ அதையே நானும் செய்தால் மட்டுமே அவர்களுடன் என்னால் போட்டி போட முடியும் 18 வயது வீரர் எவ்வாறு பயிற்சி செய்கிறார் சாப்பாட்டு விஷயத்தில் எவ்வளவு கவனம் செலுத்துகிறார் என்பதைப் போல் நானும் அதனை செய்ய வேண்டும்…

பலரும் என் சாப்பாட்டை குறை சொல்வார்கள் இருந்தாலும் ஐபிஎல் இருப்பதால் அதற்காக நான் சரியாக பிட்னெஸ் உடன் இருக்கிறேன் என சொல்லியுள்ளார் தல தோனி.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  "விராட் கோலியிடம் இன்னும் நிறைய எதிர்பார்க்கலாம்! சச்சின் டெண்டுல்கர் சொன்ன விஷயம்!"

More in Sports

To Top